காட்டேஜுக்குள் நுழைந்த ஜோடி.. 2 நாளாகியும் வரவே இல்லை.. அடுத்து நடந்த பகீர்.. அலறிய கொடைக்கானல்!

கொடைக்கானல் காட்டேஜில் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: கொடைக்கானலில் காட்டேஜுக்குள் நுழைந்த ஜோடி 2 நாளாகியும் வெளியே வரவே இல்லை.. இதற்கு பிறகுதான் அந்த பகீர் சம்பவம் வெளியே தெரியவந்தது.

தெலங்கானாவை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன்... 25 வயதாகிறது.. சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர்.. இவர் நந்தினி என்ற பெண்ணை காதலித்தார்.. அவருக்கும் 25 வயதாகிறது.

ஆனால் வீட்டில் விஷயம் தெரிந்து எதிர்ப்பு கிளம்பியது.. அதனால், 2 பேரும் வீட்டை விட்டு வெளியே வந்து தெலங்கானாவிலேயே ரிஜிஸ்தர் கல்யாணம் செய்து கொண்டனர்.

தற்கொலை

தற்கொலை

பிறகு கொடைக்கானல் அட்டுவம்பட்டிக்கு பகுதியில் ஒரு காட்டேஜ் எடுத்து தங்கினர். நந்தினியும், வெளிநாடு உட்பட பல இடங்களில் வேலைக்கு அப்ளை செய்திருந்தார். இப்போது லாக்டவுன் என்பதால் வேலை பெரிய சிக்கலாகி விட்டது.. 2 பேருக்குமே வேலை இல்லை.. கையில் காசும் இல்லை.. அதனால், 5 மாதமாக சொந்த ஊருக்கும் போக வழியில்லை.. இதனால் 2 பேருமே மன உளைச்சலில் தவித்து வந்திருக்கிறர்கள்... அக்கம்பக்கம்கூட யாரிடமும் பேசுவது இல்லையாம்.

நந்தினி

நந்தினி

இந்த நேரத்தில்தான் நந்தினிக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்திருக்கிறது... ஆனால், அங்கு போவதற்குகூட கையில் காசு இல்லை.. புது இடம் என்பதால் யாரிடமும் பணம் கேட்கவும் முடியவில்லை.. வெளிநாட்டில் வேலை கிடைத்தும் போக முடியவில்லையே என்று நொந்து கொண்ட 2 பேரும் விஷத்தை எடுத்து காபியில் கலந்து குடித்து விட்டனர்.

தற்கொலை

தற்கொலை

காட்டேஜுக்குள் இருந்து இந்த ஜோடி வெளியே வராமலேயே இருந்துள்ளது.. 2நாளாக வெளியே வராததால்தான் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்தது.. கதவை தட்டியும் திறக்கல.. அதனால் போலீசாருக்கு விஷயத்தை சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே போனால் 2 பேருமே சடலமாக கிடந்தனர்..உடல்களை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

லாக்டவுன்

லாக்டவுன்

3 செல்போன்கள் இருந்தன.. ஆனால், ஒன்றிற்குகூட காசு இல்லாமல் ரீசார்ஜ் செய்யவில்லை.. ஒத்த பைசா அந்த ரூமில் இல்லை.. ஒரே ஒரு லெட்டர்தான் இருந்தது.. காசு இல்லாததாலும், வேலை கிடைத்து போக முடியாததாலும் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்திருந்தனர்.. இன்னும் இந்த கொரோனா என்னவெல்லாம் பாடு படுத்த போகிறதோ.. என்னென்ன கொடுமை எல்லாம் நாம் பார்க்க வேண்டுமோ!?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+