பாமகவின் திடீர் அடம்: தேமுதிக வந்தால் ராமதாஸை கழட்டிவிட பாஜக திட்டம்

Subscribe to Oneindia Tamil

Lok sabha elections: PMK's sudden demand confuses BJP
சென்னை: 14 தொகுதிகள் கேட்டு பாமக திடீர் என்று அடம்பிடிப்பதால் பாஜக கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. திமுகவுடன் கூட்டணி சேர காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது. தேமுதிக கூட்டணி குறித்து இன்னும் ஒரு முடிவுக்கு வராமலேயே உள்ளது.

பாஜக கூட்டணியில் மதிமுக சேர்ந்துவிட்டது. அந்த கூட்டணியில் சேர பாமகவும் சம்மதம் தெரிவித்தது. இந்நிலையில் பாஜகவுடன் தொகுதி பங்கீட்டில் ஈடுபட்ட பாமக முதலில் 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதாம். ஆனால் தற்போது தனது கட்சியுடன் சேர்ந்திருக்கும் சில அமைப்புகளுக்கும் சீட் கேட்கிறதாம் பாமக.

அதனால் மொத்தம் எங்களுக்கு 14 தொகுதிகள் வேண்டும் என்று பாமக தெரிவித்துள்ளதாம். ஒரு கூட்டணி கட்சிக்கு மட்டும் எப்படி இத்தனை தொகுதிகளை அளிப்பது என்று யோசிக்கிறதாம் பாஜக. தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வந்துவிட்டால் பாமகவை நைசாக ஒதுக்கிவிடலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாம்.

கூட்டணி குறித்து இழு இழு என்று இழுக்கும் விஜயகாந்த் எடுக்கும் முடிவை பொறுத்தே பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தீரும் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+