ரயில்வேக்கு பட்ஜெட் போடும்போது "பாம்பு பிடிக்க" தனி "அமவுன்ட்" ஒதுக்கினால் நல்லது!
சென்னை: கோவை - சென்னை சென்டிரல் இடையிலான சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு வந்து பயணிகளை அலறடித்துள்ளது.
இந்த பாம்பு படையெடுப்பால் ரயில் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தது. நேற்று இந்தக் கூத்து நடந்துள்ளது.

பி3 3 டயயர் ஏசி பெட்டியில் ஒரு நீளமான பாம்பு எப்படியோ புகுந்துள்ளது. ஒரு பயணி தனது லக்கேஜை எடுக்கும்போது அந்தப் பாம்பு படுத்திருப்பதைப் பார்த்து விட்டு அலறினார். இதையடுத்து அந்தப் பெட்டியில் இருந்த அத்தனை பயணிகளும் பீதியடைந்தனர். பாம்பு கடித்து விடுமோ என்ற அச்சத்தில் சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து ரயிலில் இருந்த சிலர் துணிச்சலுடன் அந்தப் பாம்பைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அது கிடைத்த கேப்பில் புகுந்து மறைந்து விட்டது. கோவையிலிருந்து ரயில் கிளம்பியபோதே அந்தப் பாம்பும் ரயிலுக்குள் புகுந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
கீழ் பெர்த் வழியாக அது மெதுவாக சைட் லோயர் பெர்த்துக்கு வந்துள்ளது. இந்த பாம்புப் பதட்டம் காரணமாக சில நிமிட தாமதமாக ரயில் சென்னை சென்டிரல் வந்து சேர்ந்தது. பின்னர் போலீஸார் உள்ளே புகுந்து பாம்பைத் தேடிப்பிடித்து அகற்றியதாக ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு என்பது பல ரூபங்களில் கேள்விக்குறியாகி வருவது ரயிலில் நிம்மதியாக பயணிக்க நினைப்போருக்கு பெரும் பீதி தருவதாக அமைந்துள்ளது.
(டெல்லியில் இருக்கும்) பாஸ் பாஸ்.. ரயில்வேக்கு பட்ஜெட் போடும்போது பாம்பு பிடிக்க என்று ஒரு தனி அமவுன்ட்டையும் ஒதுக்கினால் உசிதமாக இருக்கும். பரிசீலனை செய்யுங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications