2018ல் எப்போ டூர் போகலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுங்க - லீவு நிறைய இருக்கு மக்களே!
2018ஆம் ஆண்டில் வார விடுமுறையை ஒட்டி நிறைய லீவு இருப்பதால் இப்பவே சுற்றுலா செல்ல டிக்கெட் புக் பண்ணலாம்.
Recommended Video

சென்னை: 2018 ஆம் ஆண்டு 23 விடுமுறை நாட்களை அரசு அறிவித்துள்ளது. இதில் சில விடுமுறை நாட்கள் ஞாயிறு கிழமை வந்தாலும் பல விடுமுறை நாட்கள் வார விடுமுறையை ஒட்டியே வருகிறது.
ஆடி ஓடி சம்பாதிப்பது அனுபவிக்கத்தான். ஆண்டிற்கு சில நாட்கள் விடுமுறையை உற்சாகமாக கழிக்க திட்டமிடலாம்.
புத்தாண்டு தொடங்கி ஆயுத பூஜை விடுமுறை வரை 2018ஆம் ஆண்டு வார விடுமுறை நாட்களை ஒட்டியே விஷேச தினங்கள் வருகின்றன. எனவே விடுமுறை நாட்களை சந்தோசமாக கழிக்க இப்போதே திட்டமிடுங்கள் மக்களே!

குடியரசு தினம்
2018ஆம் ஆண்டு புத்தாண்டு திங்கட்கிழமை பிறக்கிறது. எனவே டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 முடிய 3 நாட்கள் வார விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கலாம். அதேபோல குடியரசு தினம் ஜனவரி 26 வெள்ளிக்கிழமை வருகிறது. அப்போ வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்கள் என்ஜாய் பண்ணலாம்.

அறுவடை திருநாள்
பொங்கல் பண்டிகை ஞாயிறு வந்தாலும் சனிக்கிழமை தொடங்கி செவ்வாய்கிழமை ஜனவரி 16ஆம் தேதி வரை நான்கு நாட்கள் விடுமுறை காலமாகும். ஜல்லிக்கட்டு, காணும் பொங்கல் என்று களைகட்டும் இடங்களுக்கு பயணிக்கலாம்.

மார்ச் மாதம்
பிப்ரவரி மாதம் மகாசிவராத்திரி பண்டிகை வருகிறது. அது தமிழகத்தில் விடுமுறை வேண்டும் என்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம். மார்ச் மாதம் 29.3.2018 மகாவீர் ஜெயந்தி வியாழக்கிழமை 30.3.2018 புனித வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது.

ரம்ஜான், மொகரம்
15.6.2018 ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தோடு சனி, ஞாயிறு விடுமுறை நாளாகும். அதே போல 21.9.2018 மொகரம் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதோடு வெள்ளி சனி, ஞாயிறு என விடுமுறையை கழிக்க திட்டம் போடலாம்.

பண்டிகை நாட்கள்
18.10.2018 ஆயுத பூஜை வியாழக்கிழமை தொடங்கி 19.10.2018 விஜயதசமி வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை கொண்டாட்டமாக வருகிறது. அதே போல 6.11.2018 தீபாவளி திருநாள் செவ்வாய்க்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் என 5 நாட்கள் விடுமுறை நாட்களாகிவிடும். இப்போதே திட்டமிடுங்கள்,விமானம், ரயில், ஹோட்டல்களில் புக் பண்ணுங்க.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications