140 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் தப்பியோட்டம்
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே நள்ளிரவில் காய்கறி மூட்டைகளுடன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது. அப்போது அரிசியை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததால் டிரைவர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடினார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து நாகர்கோவில் நோக்கி காய்கறி லோடு ஏற்றிக் கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு மினி லாரி ஒன்று புறப்பட்டுச் சென்றது. இடைசெவல் நான்குவழி சாலையில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

அப்போது லாரியில் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 140 ரேஷன் அரிசி மூட்டைகள் சாலையில் சிதறி கிடந்தன. காய்கறிகளும் ரோட்டில் சிதறின.
காய்கறி மூட்டைகளுடன் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லாரி கவிழ்ந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் நாலாட்டின் போலீஸ்
இன்ஸ்பெக்டர் பொன்னரசு, உணவு பாதுகாப்பு ஆய்வாளர் வனசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் மற்றும் அதில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதையடுத்து சாலையில் கிடந்த ரேஷன் அரிசியை மூட்டைகளில் அடைத்த உணவு பாதுகாப்பு அலுவலர் வனசுந்தரம் அவற்றை தூத்துக்குடி அரசு உணவு கிடங்குக்கு அனுப்பி வைத்தார். நாலாட்டின்புதூர் போலீசார் லாரியை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் அதில் வந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications