ஆரணி அருகே தாய், மகளை கொலை... லாரி டிரைவர் தற்கொலை
ஆரணி அருகே தாய், மகளை கொலை செய்த லாரி டிரைவர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video

ஆரணி: ஆரணி அருகே தாய், மகளை கொலை செய்த லாரி டிரைவர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ஊராட்சி ஜம்புகொண்டாபுரம் கிராமத்தில் கொண்டம் கொல்லமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (55), விவசாயி. இவர் எலக்ட்ரீசியன் வேலையும் செய்து வருகிறார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (45), மகள் நிர்மலா (24).
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் நிர்மலா படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜவேலின் மகன் அன்பழகன் (35) நிர்மலாவை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார். இவர் சென்னையில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.

பணஉதவி
இந்நிலையில் நிர்மலாவை படிப்பு முடிந்தவுடன் அன்பழகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக சிவராமனும், சாமுண்டீஸ்வரியும் உறுதி அளித்தனர். இதை நம்பி நிர்மலாவின் படிப்புக்கும் அன்பழகன் பணஉதவி செய்து வந்தார்.

கல்யாணம்
இதனிடையே சென்னையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார் அன்பழகன். இதையடுத்து நேற்று முன் தினம் சாமுண்டீஸ்வரியின் வீட்டுக்கு சென்ற அன்பழகன், நிர்மலாவை கல்யாணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

கத்தியால் வெட்டு
அப்போது சிவராமன் தம்பதியினர் அன்பழகனுக்கு நிர்மலாவை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். இதையடுத்து அன்பழகன் அவர்களிடம் தகராறு செய்துள்ளார். எனினும் அவர்கள் ஒப்புக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த அன்பழகன் , சிவராமன் வீட்டுக்கு சென்று வெளியே படுத்திருந்த சிவராமனையும், தாழ்வாரத்தில் படுத்திருந்த சாமுண்டீஸ்வரியையும் கத்தியால் வெட்டினார்.

திருவண்ணாமலை மருத்துவமனை
பின்னர் உள்ளே நிர்மலாவின் அறைக்கு சென்று அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். இதையடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார். சிவராமன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை நேற்று சிலர் பார்த்துவிட்டு அவரை மீட்டு திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பரபரப்பு
இந்த விவகாரம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி பொன்னி விசாரணை நடத்தினார். திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்ததால் கண்ணமங்கலம் அருகே தாய், மகளை கொலை செய்துவிட்டு லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications