கரூர் அருகே குடிசைக்குள் புகுந்த கோழி ஏற்றிச் சென்ற லாரி: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்
கரூர்: கரூர் அருகே குடிசைக்குள் லாரி புகுந்ததில் 2 பேர் பலியாகினர், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளியில் மணல் குவாரி செயல்பட்டு வருகின்றது. இங்கு மணல் ஏற்ற வரும் லாரிகளின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் திம்மாச்சிபுரத்தைச் சேர்ந்த நடேசன், வீரவல்லியைச் சேர்ந்த பொன்னர், ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த கலைசெல்வன் மற்றும் ரகு, வடசேரியைச் சேர்ந்த ரமேஷ், முசிறி மணல்மேடு பகுதியைச் சேர்ந்த மணிமாறன், புலியூரைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் பணி முடிந்ததும் அருகில் உள்ள குடிசைக்குள் தூங்குவது வழக்கம். அது போலத்தான் அன்றும் அவர்கள் தூங்க சென்றனர்.
இந்த நிலையில் கரூர்-திருச்சி பைபாஸ் ரோட்டில் சாலை ஓரத்தில் உள்ள அந்த குடிசையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, பல்லடத்தில் இருந்து திருச்சிக்கு கோழிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரி தண்ணீர்பள்ளி அருகே வந்த போது சாலையோரத்தில் இருந்த கல்லில் மோதியது. இதில் நிலை தடுமாறி லாரி மணல் லாரி போக்குவரத்தை சரிசெய்யும் நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த குடிசைக்குள் பாய்ந்தது.
இதில் மணல் குவாரி தொழிலாளர்கள் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டனர். நடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னர் என்பவர் இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 5 பேரும் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மணல் குவாரிகளால் அதிக அளவில் விபத்து ஏற்படுவதாகவும், அந்த இடத்தில் இருந்து உடனே மணல் குவாரியை மாற்ற வேண்டும் என திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி பொது மக்களை சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட செய்தனர். மேலும் விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications