டயர் வெடித்து சாக்கடைக்குள் விழுந்த லாரி... இருவர் பலி... - வீடியோ
அந்தியூரில் அதிக எடைகொண்ட மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி, டயர் வெடித்து சாக்கடைக்குள் விழுந்ததால் இருவர் மரணமடைந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி, பாரம் தாங்காமல் டயர் வெடித்து சாக்கடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேர் மரணமடைந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
அதிக அளவு எடை உள்ள மரக்கட்டைகளை லாரியில் ஏற்றி, காங்கேயத்திலிருந்து அந்தியூர் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அந்தியூரை நெருங்கும்போது, எடை தாங்காமல் லாரியின் முன்பக்க டயர் வெடித்தது.

இதனால், லாரி கட்டுப்பாட்டை இழந்து, 10 அடி ஆழமுள்ள சாக்கடைக்குள் விழுந்தது. இதில் மரக்கட்டைகளின் மேல் அமர்ந்து வந்த பழனிச்சாமி மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
காவல்துறையினர், இந்த விபத்தை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு லாரியில் எத்தனை டன் எடை ஏற்ற வேண்டும் என்கிற விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால்தான் இம்மாதிரியான விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications