கறி முதல் கார் வரை.. அத்தனை சரக்கு லாரிகளும் நிறுத்தம்.. ஸ்தம்பித்தது கேரளா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து 18 சோதனைச் சாவடிகள் வழியாக கேரளாவுக்கு செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் காய்கறிகள், கறிக்கோழிகள் தேக்கமடைந்துள்ளன. கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து அம்மாநில அரசு வரும் 6 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

கேரளாவுக்கு கோவை மாவட்ட எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச்சாவடி வழியாக தினமும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் கேரள மாநில வணிக வரித்துறையின் தணிக்கைக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.

Lorry strike intensifies; transportation of goods hit

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் லாரிகளை இயக்க மாட்டோம் என்று தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், தமிழக-கேரள மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் அறிவித்தனர்.

அதன்படி கடந்த 1ஆம் தேதி முதல் லாரிகளின் வேலை நிறுத்தம் தொடங்கியது. ஏராளமான லாரிகள் சோதனைச்சாவடியின் இருபுறமும் அணிவகுத்து நிற்கின்றன.

லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் லாரி உரிமையாளர்களை கேரள முதல்-மந்திரி நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். லாரி உரிமையாளர்கள் கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்ற போது பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் லாரி உரிமையாளர்கள் ஏமாற்றமடைந்த லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அனைத்து லாரிகளும் நிறுத்தம்

நேற்று 3-வது நாளாக இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது. 24 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்காவிட்டால் 18 வழிகளிலும் கேரளா செல்லும் லாரியை நிறுத்துவோம் என்று கெடு விதிக்கப்பட்டது. அந்த கெடு வெள்ளிக்கிழமை மதியத்துடன் முடிவடைந்ததால், படிப்படியாக 18 சோதனை சாவடிகள் வழியாகவும் கேரளாவுக்கு செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டன.

பொருட்களுக்கு தட்டுப்பாடு

நள்ளிரவு முதல் கேரளாவின் அனைத்து வழித்தடங்களிலும் லாரிகள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளதால் கேரளாவில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

ரூ.600 கோடி வருவாய் இழப்பு

லாரி உரிமையாளர்கள் போராட்டத்துக்கு கேரளா வியாபாரிகள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரளாவுக்கு கறிவேப்பிலை முதல் கார்கள் வரை வாளையார் சோதனை சாவடி வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் தினமும் ரூ.600 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் தேக்கம்

கேரள மாநிலத்துக்கு வாளையாறு சோதனைச் சாவடி வழியாக தினமும் 600 லாரிகளில் பால், காய்கறிகள், 1 கோடி முட்டை, 90 லட்சம் கறிக்கோழிகள் மற்றும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. லாரிகள் ஸ்டிரைக் காரணமாக இவை அனைத்தும் தேக்கமடைந்துள்ளன. லாரி உரிமையாளர்கள் போராட்டத்துக்கு கியாஸ் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகளின் உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

இந்நிலையில் கேரள அரசு 6ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. மாநில நிதிஅமைச்சர் கே.எம்.மாணி கூறும்போது, ‘‘லாரி போக்குவரத்து பிரச்சினையை தீர்ப்பதற்காக 6 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு, 6 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+