வெள்ளத்தில் இழந்த சான்றிதழ், ஆவணங்களின் நகல் பெறும் சிறப்பு முகாம் நாளை துவக்கம்
சென்னை: வெள்ளத்தில் சான்றிதழ்கள், ஆவணங்களை இழந்த சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு நகல்கள் வழங்கும் சிறப்பு முகாம்கள் நாளை முதல் 15 நாட்களுக்கு நடத்தப்படுகிறது.
வரலாறு காணாத கனமழையால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்களை இழந்தனர். மாணவ-மாணவியர் புத்தகங்களை இழந்தனர்.

புத்தகங்களை இழந்தவர்களுக்கு அரசு புதிய நோட்டு புத்தகங்களை அளித்து வருகிறது. மேலும் சான்றிதழ்கள், ஆவணங்களை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் முகாம் நடத்தி கட்டணமில்லாமல் சான்றிதழ்கள், ஆவணங்களின் நகல்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
கல்வி சான்றிதழ்கள், நிலம், வீட்டு மனை பட்டா, கேஸ் இணைப்பு புத்தகம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆட்டோ ஓட்டுனர் உரிமம், வாகன பதிவுச் சான்று உள்ளிட்டவற்றின் நகல்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
சான்றிதழ்கள், ஆவணங்களின் நகல்கள் வழங்கும் முகாம் நாளை முதல் 28ம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இந்த முகாம்கள் நாளை முதல் நடக்கிறது. வெள்ளத்தில் சான்றிதழ்கள், ஆவணங்களை இழந்தவர்கள் முகாம்களில் நகல் கேட்டு விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் நகல்கள் இலவசமாக அளிக்கப்படும்.
சென்னையில் முகாம்கள் நடக்கும் இடங்களின் விபரம்,
* 473, திருவொற்றியூர் நெடுஞ்சாலை (அப்பல்லோ மருத்துவமனை அருகில்), தண்டையார்பேட்டை
* 3, ராஜா முத்தையா சாலை, பெரியமேடு (நேரு ஸ்டேடியம் அருகில்), புரசைவாக்கம்
* 3, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் ரயில் நிலையம் அருகில், பெரம்பூர்
* 25, யுனைடெட் இந்தியா காலனி, முதல் மெயின் ரோடு, அயனாவரம்
* 88, மேயர் ராமநாதன் சாலை, சேத்துப்பட்டு
* 4, மேற்கு மாடவீதி, கோயம்பேடு, (குறுங்காலீ சுவரர் கோவில் அருகில்)
* புதிய எண்.1, பழைய எண்.2, பாரதிதாசன் காலனி, கே.கே.நகர்
* 370, அண்ணாசாலை, சைதாப்பேட்டை
* 28, பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம்
* ஐ.ஆர்.டி. வளாகம், 100 அடி சாலை, தரமணி
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications