மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்.. காதலனின் வீட்டை கொளுத்திய தந்தை.. வேலூரில் நடந்த சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் அருகே மகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த தந்தை, காதலனின் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டை கொளுத்திய நபர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள அகரம் கிராமம் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் குமார் - சுசிலா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வரும் சூழலில், மகன் ராஜேஷ், அகரம் பகுதியில் பால் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

Love Marriage

குமார் தனது மனைவியுடன் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் என்பவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் குமாருக்கும், ஆனந்தனுக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையே குமார் மகன் ராஜேஷுக்கும், ஆனந்தன் மகள் வைஷ்ணவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே, காதலுக்கு பெண் வீட்டாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் இருவரும் பிரிந்து விடுவோம் என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, 2 நாட்களுக்கு முன்பு இரவு ராஜேஷ் மற்றும் வைஷ்ணவி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு பெங்களூருக்கு சென்றுள்ளனர். இந்த தகவலறிந்த ஆனந்தன் குடும்பத்தினர் பெங்களூருவில் உள்ள குமாருக்கு போனில் தொடர்பு கொண்டு மகளை தன்னிடம் அனுப்பி வைக்கும்படியும், இல்லை என்றால் உன் வீட்டை எரித்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கடும் ஆத்திரத்தில் இருந்த ஆனந்தன் நேத்து முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் தனது உறவினரான சிவகுமார் என்பவருடன் சேர்ந்து குமாரின் குடிசை வீட்டில், புகுந்து அரிசி பானையில் வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டும் வீட்டை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் குமார் வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது வீட்டில் இருந்தவீட்டு பத்திரம், துணி, பாத்திரங்கள் என சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமானது.

இது குறித்து குமார் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த ஆனந்தனை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சிவகுமார், உமாபதி, கோபி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே வேலூரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

அதேபோல் வீட்டை எரிக்க பயன்படுத்திய பெட்ரோல் கேன் உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நான்கு பேர் மீதும் மூன்று பிரிவுகளும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனந்தன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+