வங்கக்கடல் காற்றழுத்தம் புயலாக மாறலாம்.. சென்னை உட்பட தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு!
அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கரையை கடக்காமலேயே தென் தமிழகத்தை ஆட்டிப்படைத்துள்ளது. இதனால் தென் தமிழகம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
கன்னியாகுமரி, நெல்லை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் மழை நீடித்து வருகிறது. இதனால் தென்மாவட்டங்களில் வெள்ள நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி அங்கேயே நீடிப்பதாக கூறினார்.

மேலும் ஒரு புயலுக்கு வாய்ப்பு
அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தை நோக்கி மேலும் ஒரு புயல் வர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

நெருங்கும்போது புயலாகும்
அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழக கரையை நெருங்கும்போது புயலாக மாறும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
அந்த புயலுக்கு சாகர் என பெயர் சூட்டப்படும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். மேலும் தென் மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் கனமழை
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் டிசம்பர் 6ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

எச்சரிக்கை எதுவுமில்லை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு அச்சுறுத்தலுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாத்தனூரில் 23 சென்டிமீட்டர்
சென்னையில் சில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனிடையே கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் 23 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications