வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் ... தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்து வருகிறது.
தமிழகத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாகவும், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் சில நாள்களாக மழை பெய்து வந்தது.
தமிழகத்தை வாட்டி வதைத்து வந்த வெப்பத்தின் தாக்கம் தற்போது முழுவதுமாக குறைந்துள்ளது. குளிர்ந்த காற்றும், சாரல் மழையும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் மழை
சனிக்கிழமை காலை நிலவரப்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்திலும், கூடலூர் பஜார் பகுதியிலும் 30 மி.மீ. மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆகிய இடங்களில் 20 மி.மீ. மழையும் பதிவானது. இதனிடைய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குறைந்த காற்றழுத்தம்
வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் மேகமூட்டம்
சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும்.

மழை அளவு
அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கூடலூர், திருவள்ளூர், செம்பரப்பாக்கத்தில் தலா ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications