கோடை மழைக்கு தயாராகுங்கள் தமிழக மக்களே.. வெயிலின் தாக்கம் குறையுமா?
தமிழகத்தில் வருகிற மார்ச் முதல் வாரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் வருகிற மார்ச் முதல் வாரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. தற்போது பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உணரப்படுகிறது.

எதிர்வரும் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் தமிழத்தில் வருகிற மார்ச் முதல் வாரம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் எந்த எந்தப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பது குறித்து தற்போது கணிக்க முடியாது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழ்நாடு வெதர்மேன் கடந்த 17ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் மழை பற்றி பதிவு செய்திருந்தார். அதில் தமிழகத்தின் வேண்டுதலை இவ்வளவு சீக்கிரம் கடவுள் நிறைவேற்றுவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை . ஜனவரி மாதம்போல் பிப்ரவரி மாதம் இல்லை. பிப்ரவரி மாதம் மாநிலத்தை மிக மோசமான நிலையில் விட்டுச் செல்ல போகிறது . ஆனால், மேகங்களின் நகர்வுகளை வைத்துப் பார்க்கும்போது வருகிற மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தார்.
அதுபோலவே சென்னை வானிலை ஆய்வு மையமும் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் மழை பெய்யும் என்று அறிவுத்துள்ளது. இதனால் தமிழகத்தில வெயிலின் தாக்கம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications