தேர்தல்: இலவச மழையில் நனையும் தமிழக வாக்காளர்கள்... குத்துப்பாட்டு டான்ஸும் உண்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் பிறந்தநாளை தொடர்ந்து கொண்டாடும் அதிமுகவினர் இலவசங்கள் வாரி வழங்கி வருகின்றனர் அதிமுகவினர்.

அரசு அறிவித்த இலவச மிக்சி, கிரைண்டர், ஃபேன் மட்டுமல்லாது மாணவர்களுக்கு மடிக்கணினி, புத்தகப்பை, நோட்டு புத்தகங்கள், டிபன்பாக்ஸ் கூட வழங்குகின்றனர் அதிமுகவினர்.

அது மட்டுமல்லாது கோவில்களில் அன்னதானம் வழங்கி அசத்திய அதிமுகவினர் சிலம்பாட்ட பயிற்சியும் வழங்கி வருகின்றனர்.

ஆண்டிபட்டி தங்கத் தமிழ்செல்வன்

ஆண்டிபட்டி தங்கத் தமிழ்செல்வன்

முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அதிமுகவினர் தொடர்ந்து நடத்திவருகின்றனர். தேனி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ,ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை பகுதிகளில் எம்.எல்.ஏ தங்கதமிழ் செல்வன் சார்பில் முதல்வர் பிறந்தநாளை கொண்டாடும் விதம் மாணவ,மாணவிகள் பயன்பெறும் வண்ணம் இலவசப் பரிசுகளை வாரி வழங்கினார்.

சிலம்பாட்ட பயிற்சி

சிலம்பாட்ட பயிற்சி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு தாண்டவராயன் சோழகன் பேட்டை படகோட்டி எம்ஜிஆர் சிலம்பாட்டப் பயிற்சி மையம் சார்பில் மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பாட்டப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

660 மாணவர்களுக்கு பயிற்சி

660 மாணவர்களுக்கு பயிற்சி

இந்தப் பயிற்சி கடலூர், நாகை மாவட்டத்தில் 10 மையங்களில் மொத்தம் 660 மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கான தொடக்க விழா அண்மையில் சிதம்பரத்தில் நடைபெற்றது. தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் ஏ.அருண்மொழிதேவன் பங்கேற்று பயிற்சியைத் தொடங்கி வைத்தார். தற்போது கடலூர் வேட்பாளராக அருண்மொழித் தேவன் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குத்தாட்டமும் நடனம்

குத்தாட்டமும் நடனம்

கரூர் தொகுதிக்குப் பட்ட பகுதிகளில் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாக்காளர்களை மகிழ்விக்கும் வகையில் குத்தாட்ட பாடல்களும் நடனமும் நடைபெற்றது.

இலவச மழை

இலவச மழை

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் முதல்வர் பிரசாரம் செய்யும் பகுதிகளில் வாக்களர்களுக்கு யோகம் அடித்துள்ளது. மக்கள் இலவச மழையில் நனையத் தொடங்கிவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+