தேர்தல்: தமிழகத்தில் தியேட்டர்களுக்கு இன்று விடுமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமையன்று நடைபெறுவதை ஒட்டி நாளை ஒருநாள் திரையரங்குகளை மூட தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

லோக்சபா தேர்தலில் வாக்காளர்களை வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

LS poll Movie Theaters will close on April 24

நூறு சதவிகித வாக்குப்பதிவு கொண்டு வரவேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. பொது விடுமுறையும் அறிவித்துள்ளது.

விடுமுறை விடாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

விடுமுறை நாளன்று அனைவரும் போவது தியேட்டர்களுக்குத்தான். எனவே திரையங்குகளை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருந்தது.

இதனை ஏற்று இன்று ஒருநாள் திரையரங்குகளை மூட தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையினை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தலுக்காக தியேட்டர்கள் மூடப்படுவது இதுவே முதன்முறையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+