திமுக 25, தேமுதிக 8 ப்ளஸ் ராஜ்யசபா, காங்கிரஸ் 7 தொகுதிகள் ஒதுக்கீடு?
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக 25 தொகுதிகள், தேமுதிக 8 , காங்கிரஸ் 7 தொகுதிகளில் போட்டியிடுவது என்ற உடன்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க. பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடை பெற்றன.

பின்னர் அழகிரியின் எதிர்ப்பால் தேமுதிக பிரேக் போட்டது. இந்நிலையில் திடீரென மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், கருணாநிதியை சந்தித்து பேச களநிலைமை மாறியது.
திருமா சந்திப்பு
இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், விஜயகாந்தை சந்தித்தார். அப்போது தி.மு.க. கூட்டணியில் சேர வலியுறுத்தினார் திருமாவளவன். அதற்கு பதில் அளித்த விஜயகாந்த் 2-ந்தேதி உளுந்தூர்பேட்டையில் நடக்கும் தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஓரணியில் திமுக- காங்கிரஸ்- தேமுதிக
தற்போதைய சூழலில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. ஆகிய 3 கட்சிகளும் இணைந்து ஒரே அணியாக போட்டியிடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கின்றன. எத்தனை இடங்கள் என்பது பற்றி தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகின்றன.
திமுகவுக்கு 25
தி.மு.க. 25 இடங்களில் போட்டியிடுவது என்று முடிவு எடுத்துள்ளது என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.
தேமுதிகவுக்கு 8 ப்ளஸ் 1
தேமுதிகவுக்கு 8 தொகுதிகளை கொடுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. அதோடு ஒரு ராஜ்யசபா இடமும் தே.மு.தி.க.வுக்கு வழங்க திமுக முன் வந்துள்ளதாம்
காங்கிரஸுக்கு 7
காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. 2009 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்தது. இதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications