அம்மா குடிநீர், கேண்டீன்களில் ஜெயலலிதா படத்தை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை: அம்மா குடிநீர் பாட்டில், உணவகங்கள் போன்றவற்றில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இருக்கக் கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
''தமிழகத்தில் ஏப்ரல் 24 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

5,37,52,682 வாக்காளர்கள்
தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரத்து 682 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் இரண்டு கோடியே 68 லட்சத்து 93 ஆயிரத்து 9 பேர் ஆண்கள்; இரண்டு கோடியே 68 லட்சத்து 56 ஆயிரத்து 677 பேர் பெண்கள்; 2 ஆயிரத்து 996 பேர் திருநங்கைகள்.
9ம் தேதி சிறப்பு முகாம்
இந்த தேர்தலில் வாக்காளர்களை சேர்ப்பதற்காக வருகின்ற 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு முகாமை நடத்த உள்ளோம். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிவரை முகாம் நடக்கும். பெயர் திருத்தம், நீக்கம் ஆகிய நடவடிக்கைகள் இந்த முகாமில் செய்யப்படாது.
மார்ச் 25 வரை விண்ணப்பம்
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என்பதை பார்த்துவிட்டு, பெயர் இல்லை என்றால் அங்கேயே 6 ஆம் எண் பாரத்தை வாங்கி நிரப்பிக்கொடுக்க வேண்டும். இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் சேர்க்கப்படும். மற்றபடி, பெயர் சேர்ப்பது, பெயர் திருத்தங்கள், இடமாற்றம் தொடர்பாக மார்ச் 25 ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட அலுவலகத்திலும் வழக்கம்போல் விண்ணப்பிக்கலாம்.
எஸ்.எம்.எஸ் மூலம் விபரம்
எஸ்.எம்.எஸ். மூலம் வாக்காளர் அடையாள அட்டை நம்பரை கொடுத்தால், வாக்காளர் பெயர் பட்டியலில் அந்த அடையாள அட்டைதாரரின் பெயர் இடம்பெற்று உள்ளதா? அவர் எந்த வாக்குச்சாவடியில் ஓட்டுபோட வேண்டும்? என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை, பதில் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பும் முறை பற்றி பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் ஆலோசித்து வருகிறோம். மனதில் எளிதில் பதியக்கூடிய நம்பரை தேர்வு செய்வோம். தமிழகம் முழுவதும் இந்த நவீன முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இரட்டை இலை சின்னம்
பொருட்காட்சியில் உள்ள அரசு கடைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. சில பஸ்கள், எம்.ஜி.ஆர். சமாதியில் இரட்டை இலை சின்னம் போன்ற அமைப்பு இருப்பதாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுரையை கேட்டிருக்கிறோம். இன்னும் இரண்டு நாட்களில் அதுகுறித்த ஆலோசனை பெறப்படும்.
அம்மா குடிநீர், கேண்டீன்
அம்மா குடிநீர் பாட்டில், அம்மா உணவகம் போன்றவற்றில் முதலமைச்சரின் படம் இருக்கக்கூடாது. அம்மா என்ற வார்த்தை பொதுவானது என்றும், அதை இடம்பெற செய்ய வேண்டும் என்றும் அ.தி.மு.க. கோரியுள்ளது. இதுவும் இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுரைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இலவசங்களுக்கு தடை
மிக்சி, கிரைண்டர் போன்ற இலவசங்களை கொடுப்பதை நிறுத்த வேண்டுமென்று மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
மது விற்பனை கண்காணிப்பு
திடீரென்று அதிகமாக மது விற்பனையாகும் கடைகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல் மாநில எல்லைகளில் உள்ள கிராம சாலைகளில் சோதனைச் சாவடிகள், ரகசிய கண்காணிப்பு கேமராக்களோடு நிறுவப்படும். மது கொண்டு செல்வதை உன்னிப்பாக கண்காணிப்போம்.
சமூக வலைத்தளங்கள்
பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதை கண்காணித்து வருகிறோம். தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு ஒருவர், ‘இவருக்கு ஓட்டு போடுங்கள்' என்று தகவல் அனுப்புவதில் தவறு இல்லை. ஆனால் மொத்தமாக ‘அவுட் சோர்சிங்' மூலம் அனுப்பினால், அது தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும். இதற்காக வேட்புமனுவில் அந்தந்த வேட்பாளர்களின் சமூக வலைத்தள முகவரிகளைப் பெற இருக்கிறோம். அதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும்" என்று அவர் கூறினார்.
ஓட்டுக்கு நோட்டு வாங்கதீங்க
பொதுமக்கள் ஓட்டுக்காக பணம், பொருள் வாங்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். பண விநியோகம் போன்ற தவறுகள் நடப்பது தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக தகவல் தரலாம். செல்போனில் படம் எடுத்தோ, எம்எம்எஸ் மூலமாகவோ தேர்தல் துறைக்கு புகார் அனுப்பலாம். அதற்கான வழிவகைகள் அறிவிக்கப்படும். பத்திரிகையாளர்கள் எனது கண், காது போன்றவர்கள். தவறு நடந்தால் எனக்குத் தகவல் கொடுங்கள். நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்றும் பிரவீண்குமார் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications