அதிமுக- மார்க்சிஸ்ட் கூட்டணி: பிரகாஷ் காரத் சந்திப்புக்குப் பின் ஜெ. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அதிகாப்பூர்வமாக இன்று அறிவித்தார்.
லோக்சபா தேர்தலில் வியூகம் வகுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பரதன், சுதகார் ரெட்டி, தா. பாண்டியன் ஆகியோர் சந்தித்தனர்.

அதிமுக- இ.கம்யூ கூட்டணி
இந்த சந்திப்பின் பின்னர் அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்திருப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். மேலும் தேர்தல் கூட்டணி முழக்கத்தையும் ஜெயலலிதா வெளியிட்டார்.

ஜெ.தான் பிரதமர்- பரதன்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி. பரதனும், அதிமுக அணி அதிக இடங்களில் வென்றால் ஜெயலலிதா பிரதமராக வாய்ப்பு உள்ளது என்றார்.

போயஸ் கார்டனில் பிரகாஷ் காரத், ஜி.ஆர்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலர் பிரகாஷ் காரத் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

அதிமுக- மார்க்சிஸ்ட் கூட்டணி: ஜெ.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெறுவது பற்றி பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.

பிரதமர் பற்றி இப்போது பேசுவதில் அர்த்தமில்லை
மேலும், அடுத்த பிரதமர் யார் என்பதைப் பற்றி இப்போது பேசுவதில் அர்த்தமில்லை என்றும் ஜெயலலிதா கூறினார்.

அதிக இடங்களில் வெல்வோம்- பிரகாஷ் காரத்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் காரத், லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications