100 பேர் கூட வரல.. 1 லட்சம் பேருக்கு எங்க போக.. வாயை விட்டு மாட்டிக்கொண்ட அழகிரி!
மு.க அழகிரி சென்னையில் நடத்த இருக்கும் அமைதி பேரணியில் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மதுரை: மு.க அழகிரி சென்னையில் நடத்த இருக்கும் அமைதி பேரணியில் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எப்படி இத்தனை பேரை திரட்டுவது என்று அவர் குழப்பத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன் திமுகவில் தன்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று அழகிரி பேட்டியளித்துள்ளார். ஆனாலும் திமுகவில் இருந்து அவருக்கு கிரீன் சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பேரணி நடத்துவதில் உறுதியாக உள்ளார் அழகிரி. இன்று கடசியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார் அழகிரி.

இன்னும் இரண்டு நாட்கள்
திமுகவில் பெரிய அளவில் சூறாவளியை உண்டாக்க நினைத்துள்ளார் அழகிரி. அவர் நடத்த போகும் பேரணிக்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளது. நாளை மறுநாள் சென்னையில் பேரணி நடத்த இருக்கிறார். இதற்காக சில மதுரை நிர்வாகிகள் இப்போதே, சென்னைக்கு சென்று ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். ஆனால் மற்ற நிர்வாகிகளை எப்படி சென்னைக்கு அனுப்புவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளார் அழகிரி.

நினைந்து நடக்கவில்லை
ஆனால் அழகிரி, இந்த கூட்டத்திற்காக போட்டு வைத்திருந்த திட்டம் எதுவும் நடக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். தன்னை வந்து சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான நிர்வாகிகள் யாரும் அவரை சந்திக்கவில்லை. ஒரு வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தியும் கூட, அழகிரியை சென்று 100 பேர் கூட சந்திக்கவில்லை என்று மதுரை நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

வருவது நடக்காது
ஆலோசனை கூட்டத்திற்கே 100 பேர் கூட வராத சமயத்தில் மெரினா பேரணிக்கு எப்படி 1 லட்சம் பேரை திரட்டுவது என்று யோசனையில் ஆழ்ந்து இருக்கிறார் அழகிரி. அதிமுகவில் ஓரங்கட்டப்பட்ட போது, தினகரன் மதுரையில் பெரிய கூட்டம் நடத்தி மாஸ் காட்டினார். அதேபோல திமுகவை கலங்க வைக்கலாம் என்று திட்டமிட்ட அழகிரிக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது. எப்படி 1 லட்சம் பேரை வரவைப்பது என்ற குழப்பத்தில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

போலீஸ் அனுமதி பிரச்சனை
அதேபோல், ஓமந்தூரார் கட்டிடத்தில் இருந்து நடைபேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவர் காலையிலேயே நடைபேரணி நடத்த திட்டமிட்டு இருப்பதால், போலீஸ் இந்த முழு நடைபேரணிக்கு அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஐஸ் ஹவுஸ் பகுதியில் இருந்து நடை பேரணிக்கு அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவும் அழகிரிக்கு வருத்தத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications