ஆட்சியை கலைக்காத திமுக மீதுதான் மக்களுக்கு அதிக கோபம் - மு.க.ஸ்டாலின்
நீலகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஈபிஎஸ் அரசு மீதுள்ள கோபத்தை விட அரசை கலைக்கவில்லை என மக்களுக்கு திமுக மீதுதான் கோபம் அதிகம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நீலகிரி: ஈபிஎஸ் அரசு மீதுள்ள கோபத்தை விட, அந்த அரசை கலைக்கவில்லை என திமுக மீதுதான் மக்கள் அதிக கோபத்துடன் உள்ளார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீலகிரியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஆளுங்கட்சியான எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதுள்ள கோபத்தை விட, மக்கலூக்கு திமுக மீதுதான் அதிக கோபம். ஆட்சியை திமுக கலைக்கவில்லை என்று மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர்.

போராட்டங்களை கண்டுகொள்ளாத அரசு
நெடுவாசல், கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழர்களின் ஒரே பாதுகாப்பாக திமுகதான் இருக்கிறது.

மருத்துவ குறிப்புகள் இல்லையே ஏன்?
அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த போது அரசு சார்பில் மருத்துவக் குறிப்புகள் வெளியாகின. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற போது அரசு சார்பில் மருத்துவக் குறிப்புகள் ஏன் வெளியிடப்படவில்லை? மேலும், ஜெயலலிதா உடல்நிலை குறித்து பிரதமர் மோடிக்கு நன்கு தெரியும். ஆகையால் தான் அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவை பார்க்கவில்லை என குற்றம்சாட்டிய ஸ்டாலின், திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஜெயலலிதா கைரேகையும் கையெழுத்தும் பொய்.

மத்திய அரசுக்கு நன்கு தெரியும்
ஜெயலலிதா உடல்நிலை குறித்து மத்திய அரசுக்கு நன்கு தெரியும். ஜெயலலிதா உடல்நிலையை முன்கூட்டியே அறிந்திருந்ததால்தான் பிரதமர் மோடி அப்பல்லோவுக்கு வரவில்லை.

புதிய ஆளுநர் நியமனம் இதற்குதானா?
ஜெயலலிதா மரணம் குறித்த உண்மைகளை மறைக்கவே புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications