குப்பையை போல அதிமுக ஆட்சியை அகற்றுங்கள்... நமக்கு நாமே பயணத்தில் பேசிய ஸ்டாலின்
சென்னை: சென்னையில் குப்பைகளை அகற்ற துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டது போன்று, ஆட்சியில் உள்ள குப்பைகளை அகற்ற மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று ஆர்.கே.நகரில் நமக்கு நாமே 4ம் கட்ட பயணத்தைத் தொடங்கிய மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மூலம் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். கன்னியாகுமரி தொடங்கி திருவள்ளூர் வரை 3 கட்டமாக பயணம் மேற்கொண்டார் ஸ்டாலின்.
தொழிலாளர்கள், மகளிர் குழுவினர், மாணவர்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். தற்போது சென்னை ஆர்.கே.நகரில் 4ம் கட்ட பயணத்தை இன்று தொடங்கியுள்ளார்.

212 தொகுதிளில் நமக்கு நாமே
கடந்த ஆண்டு 212 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் சந்திப்பை, ஸ்டாலின் நிறைவு செய்துள்ளார். இவர் இதுவரை 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு கடந்து வந்துள்ளார்.

சென்னையில் 4ம் கட்ட பயணம்
சென்னையில் இன்று நான்காம் கட்ட பயணத்தை தொடங்கிய ஸ்டாலின், கிழக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 5வது தெருவில் உள்ள நாடார் உறவின் முறை திருமண மண்டபத்தில் துப்புரவு தொழிலாளர்களை சந்தித்து பேசினார் ஸ்டாலின்.

ஆர்.கே.நகரில் ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் துப்புரவு தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வில் வசந்தம் ஏற்படும் என்று உறுதியளித்தார்.

4 லட்சம் மனுக்கள்
துப்புரவு பணியாளர்கள் நலவாரியம் திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இதுவரை பயணம் செய்த 212 தொகுதிகளில் 4 லட்சம் மனுக்களை மக்கள் தந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆட்சியை அகற்றுங்கள்
சென்னையில் குப்பைகளை அகற்றியதைப் போல அதிமுக ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் என்றும் கூறிய ஸ்டாலின், 2016ம் ஆண்டில் திமுக ஆட்சியை பொதுமக்கள்தான் அதிகம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடிதம் எழுதினால் போதுமா?
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முதல்வர் கடிதம் மட்டும் எழுதினால் போதாது. முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர் குழுக்கள் நேரில் சென்று மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

பலமான கூட்டணி
தே.மு.தி.க.வுடன் கூட்டணி ஏற்படுமா? இல்லையா? என்பதெல்லாம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் வாக்குறுதி மற்றும் வியூகம் குறித்து உரிய நேரத்தில் தலைவர் கருணாநிதி அறிவிப்பார்.

வாட்ஸ் அப் வதந்தி
செம்பரம்பாக்கம் ஏரி திறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் நேற்று போராட்டம் நடத்தியபோது அதை திசை திருப்புவதற்காக பள்ளிகளில் வெடிகுண்டு புரளியை வாட்ஸ்அப் மூலமாக ஆளுங்கட்சியினர் பரப்பியதாக நான் சந்தேகப்படுகிறேன் என்றும் கூறினார் ஸ்டாலின்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications