செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.. கடந்து வந்த முள் பாதை!
திமுகவின் பொருளாளராக உள்ள மு.க. ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பொறுப்பை திமுக பொதுக் குழு வழங்கியுள்ளது. இந்தப் பதவிக்கு வந்து சேர அவர் பயணித்த தூரம் மிக நீண்டது.
சென்னை: திமுகவின் செயல் தலைவர் பதவியை அடைந்துள்ளார் மு.க.ஸ்டாலின். இதற்காக அவர் பயணித்த தூரம் நீண்டது, நெடியது.
1953ம் ஆண்டு பிறந்த மு.க.ஸ்டாலின் தனது 63வது வயதில் திமுகவின் செயல் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். தற்போது வகித்து வரும் பொருளாளர் பொறுப்புடன் செயல் தலைவர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 3வது மகனாக பிறந்தவர் ஸ்டாலின். சிறு வயதில் இருந்தே திமுகவின் தன்னை இணைத்துக் கொண்ட ஸ்டாலின் சென்னை சேத்துப்பட்டு கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் படித்தார். திமுகவின் பிரச்சார நாடகங்களை போட்டு அதில் தனது தந்தையும், கட்சியின் தலைவருமான கருணாநிதியின் குரலில் பேசி நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஜான்சி ராணி பூங்காவில்
1980ல் இளைஞர் அணியின் அமைப்பு மதுரை உள்ள ஜான்சி ராணி பூங்காவில் தொடங்கப்பட்டது. இதில் ஏழு பேர் கொண்ட அமைப்புச் செயலாளர்களில் ஸ்டாலினும் ஒருவாராக நியமிக்கப்பட்டார். முன்னதாக 1975ல் இந்தியாவில் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட போது, மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்
மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்வாக சட்டசபைக்கு அனுப்பப்பட்டவர். கடைசி 2 முறையாக கொளத்தூர் தொகுதியில் நின்று எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். தற்போது முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் பொறுப்பேற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சென்னை மேயர்
1996ம் ஆண்டு முதல் முறையாக சென்னையில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் இரண்டாவது முறையாகவும் 2001ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் இந்த முறையை மேயர் பதவியை வகிக்க முடியாத அளவிற்கு, ஒரு நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்ற சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதை அடுத்து மேயராக செயல்பட முடியாத சூழல் உருவானது.

உள்ளாட்சித் துறை அமைச்சர்
தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சாராக இருந்து தமிழகத்தின் முக்கிய பங்காற்றியவர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் செயல் தலைவராக தற்போது திமுக பொதுக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications