ரூ.570 கோடி பணம் பறிமுதல்.. உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும்: ஸ்டாலின்
கரூர்: திருப்பூரில் ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்து உச்சநீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியை ஆதரித்து ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வேலாயுதபாளையத்தில் அவர் பேசுகையில், திருப்பூரில் 570 கோடி ரூபாயை கொண்டு சென்ற மூன்று கன்டெய்னர்களை கைப்பற்றியதாக செய்தி வெளியாகி உள்ளது.

அதையும் தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளோ, தமிழக பறக்கும் படை அதிகாரிகளோ நிறுத்திப் பிடிக்கவில்லை. வெளி மாநிலத்திலிருந்து பார்வையாளராக வந்திருந்த ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியும், ஒரு வெளி மாநில தேர்தல் பார்வையாளரும் பிடித்திருக்கிறார்கள்.
கரூரையும், கண்டெய்னரையும்" மூடி மறைக்க திட்டமிட்ட சதி நடக்கிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆகவே "கரூர் அன்புநாதன் பணம் பறிமுதல்" குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல் 570 கோடி ரூபாய் திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார்.
மேலும், 500 கோடியா இல்லை 5000 கோடியா என்ற உண்மை மக்களுக்கு தெரிந்தாக வேண்டும். இந்த 570 கோடியும் பாரத ஸ்டேட் வங்கியின் பணம் என்பதற்கான எந்த விதமான வெளிப்படையான உண்மைகளும் இதுவரை வெளிவரவில்லை என்பது உள்ளபடியே அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது என்று ஸ்டாலின் கூறினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications