ஏற்காடு இடைத்தேர்தல்: மாறனை ஆதரித்து ஸ்டாலின் 4 நாள் பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

ஏற்காடு: ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மாறனை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நான்கு நாட்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

ஏற்காடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த, அதிமுகவின் பொருமாள் மரணமடைந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு அடுத்த மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில், அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகின்றன.

அதிமுக சார்பில் மறைந்த எம்.எல்.ஏ பொருமாளின் மனைவி சாரோஜா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து தமிழக முதலமைச்சரும்., அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வரும் 28ம் தேதி வாக்கு சேகரிக்கிறார்.

திமுக வேட்பாளர் மாறனை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின். 29 ம் தேதி முதல், 2ம் தேதி வரை நான்கு நாட்கள் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயண விவரமாவது...

முதல் நாள்....

முதல் நாள்....

29-ந்தேதி மாலை 4 மணிக்கு கக்கன் காலனியில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன்பிறகு உடையாப்பட்டி, அதிகாரிப்பட்டி, மாசி நாயக்கன்பட்டி, அயோத்தியாப்பட்டணம் (ஆத்தூர் பேருந்துநிறுத்தம்), அயோத்தியாப்பட்டணம் (இராமர் கோவில்), மேட்டுப்பட்டி தாதனூர், தேவாங்கர் காலனி, குள்ளம்பட்டி, பாலாஜி காலனி, சந்தியா காலனி, வரட்டேரிக்காடு முட்டைக்கடை., மின்னாம்பள்ளி (மாரியம்மன் கோவில் திடல்), செல்லியம்பாளையம் (அருந்ததியர் காலனி), அ.நா. மங்கலம், ஜலகண்டாபுரம், கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, அனுப்பூர், எஸ்.என். மங்கலம், கருமா புரம் வழியாக இரவு 9.45 மணிக்கு மேட்டுபட்டியில் பிரசாரத்தை முடிக்கிறார்.

2ம் நாள்...

2ம் நாள்...

30ம் தேதியன்று மாலை 4 மணிக்கு ராமலிங்கபுரத்தில் பிரசாரம் தொடங்குகிறார். பின்னர் வெள்ளாள குண்டம் பிரிவு, சேசன்சாவடி, முத்தம்பட்டி, சிங்கிபுரம் காலனி, பழனியாபுரம், பொன்னாரம்பட்டி, சிங்கிபுரம், சோமம்பட்டி, விலாரிபாளையம், மன்னார்பாளையம், வே.புதூர், குமாரபாளையம், திருமனூர், வேப்பிலைப்பட்டி, வெள்ளாகுண்டம், சேத்துக்குட்டை, காரிப்பட்டி, சின்னகவுண்டாபுரம், பெரியகவுண்டாபுரம், இராம் நகர் வழியாக இரவு அயோத்தியா பட்டணத்தில் பிரசாரத்தை முடிக்கிறார்.

3ம் நாள்....

3ம் நாள்....

டிசம்பர் 1ம் தேதியன்று காலை 10.05 மணிக்கு ஏற்காடு டவுனில் பிரசாரம் தொடங்குகிறார். தொடர்ந்து வேலூர் (நடூர்), நாகலூர், செம்ம நத்தம், பிலியூர், மஞ்சக்குட்டை, செங்காடு, கீரக்காடு (வாழவந்தி), மாரமங்கலம், கொட்டச்சேடு (நார்த்தச்சேடு), குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, பருத்திக்காடு (பூவனூர்), சுக்கம்பட்டி (பேருந்து நிறுத்தம்), வலசையூர், பள்ளிப்பட்டி, தைலானூர் (பேருந்து நிறுத்தம்), சின்னனூர், வீராணம், சின்ன வீராணம், கத்தாளப்பாடி, வழியாக இரவு டி.பெருமாபாளையத்தில் பிரசாரத்தை முடிக்கிறார்.

4ம் நாள்....

4ம் நாள்....

டிசம்பர் 2ம் காலை 9 மணிக்கு கோலாத்துக்கோம்பையில் பிரசாரம் தொடங்குகிறார். பின்னர் நீர்முள்ளிக் குட்டை, பள்ளத்தாதனூர், சி.என்.பாளையம், சந்திரபிள்ளைவலசு, குறிச்சி, புழுதிக்குட்டை, தும்பல், பாப்பநாயக்கன்பட்டி, கருமந்துறை, பேளூர், அத்தனூர்பட்டி, துக்கியாம் பாளையம், வாழப்பாடி வழியாக இரவு பேரூரில் பிரசாரத்தை முடிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+