திமுக கூட்டணிக்கு மக்கள் மாபெரும் வெற்றியை தருவர்: மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை பெற்றுத் தருவார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை கோபாலபுரம் சாரதா உயர்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று வாக்களித்தார்.

ஆளுங்கட்சிக்கு எதிரான அலை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை வீசுகிறது. தோல்வி பயத்தினால் பணத்தை கொடுத்து வாக்கு பெற முயற்சி செய்தனர்.

வெற்றி திமுகவிற்கே
ஆனாலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் மாபெரும் வெற்றியை தேடித் தருவார்கள் என்பதை மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இயந்திரங்கள் பழுது
பெரும்பாலான இடங்களில் மின்னணு இயந்திரங்கள் பழுதாகியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. பூத்துகளில் முகவர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்து பின்னர் சரிசெய்யப்பட்டு வருகிறது என்றார்.

மு.க.அழகிரி
இதனிடையே திமுக முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி தனது மகன் தயாநிதி அழகிரியுடன் சென்று மதுரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

வெற்றி எங்களுக்கே
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, வெற்றி எங்களுக்கே என்று பொதுவாக கூறினார். அவர் யாரை சொல்லுகிறார், எந்த கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தார் என்று தெரியாமல் செய்தியாளர்கள் குழம்பி நின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications