உணர்ச்சியோடு இருக்கும் உங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன்.. திமுக மகளிருக்கு ஸ்டாலின் புகழாரம்!
திருவள்ளூர்: திமுக அமைப்புகளிலேயே மகளிர் அணிதான் உணர்ச்சியோடு இருக்கிறது. இளைஞர் அணியை விட உணர்ச்சியோடு இருக்கிறது. இதற்காகப் பெருமைப்படுகிறேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவள்ளுர் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் காயத்ரி ஸ்ரீதரன் இல்ல மணவிழாவில் பேசுகையில் இப்படிப் பாராட்டினார் ஸ்டாலின்.

எத்தனையோ அமைப்புகள் இருந்தும்
தி.மு.க.வில் எத்தனையோ துணை அமைப்புகள் இருந்தாலும், அதில் இளைஞர் அணிதான் முன்னணியில் இருக்கிறது என்று நான் பெருமையோடு சொல்வதுண்டு.

2 மாதமாக ஆய்வு
கடந்த இரண்டு மாத காலமாக தமிழகத்திலே பல மாவட்டங்களுக்குச் சென்று கழகத்தினுடைய ஆய்வுப் பணியை நான் நடத்திக் கொண்டிருக்கிறேன். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, கிளைக் கழகம், பேரூர்க் கழகம், ஒன்றியக் கழகம், நகரக் கழகம், ஊராட்சிக் கிளைச் செயலாளர்கள், அதற்குப் பிறகு மாவட்டக் கழக நிர்வாகிகள் என்று ஒவ்வொரு பிரிவாக அழைத்து, ஆய்வு நிகழ்ச்சிகளை நான் நடத்திக்கொண்டிருக்கிறேன்.

உணர்ச்சி இருப்பது மகளிருக்குத்தான்
இந்த ஆய்வுக் கூட்டங்களை நடத்தியதற்குப் பிறகு, நான் உணர்ந்து கொண்ட செய்தி என்னவென்று கேட்டால், இன்றைக்கு எல்லா அணிகளையும் விட, வெளியில் தெரியாமல், உணர்ச்சியோடு இருக்கக் கூடிய ஒரு அணி எது என்று சொன்னால், நிச்சயமாக அது மகளிர் அணியாகத்தான் இருக்க முடியும் என்ற நம்பிக்கை அந்த ஆய்வுக் கூட்டங்கள் மூலம் ஏற்பட்டிருக்கிறது.

11 மாவட்டத்தில் உணர்ந்தது இது
இதுவரையில் நான் 11 மாவட்டங்களில் ஆய்வுப் பணியினை முடித்திருக்கிறேன். எல்லா மாவட்டங்களிலிருந்தும் இந்தச் செய்தியை நான் தெரிந்துகொண்டேன். அவர்களெல்லாம் அந்த ஆய்வு நிகழ்ச்சியிலே பங்கேற்று, என்னிடத்திலே சில கருத்துக்களை எடுத்துச் சொல்கிறபோது, கழகத்தில் எப்படிப் பணியாற்ற வேண்டும், எந்த நிலையில் இருந்து பணியாற்ற வேண்டும், நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அடைந்த தோல்விக்கு என்ன காரணம், அந்த தோல்வியைச் சரிசெய்வதற்கு வரக்கூடிய காலங்களில் நாம் என்ன நிலையை எடுக்க வேண்டும் என்றெல்லாம் கருத்துக்களை, ஆலோசனைகளை, அறிவுரைகளை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

நம்பிக்கையோடு இருக்கும் சகோதரிகள்
இன்னும் கூட நான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், கழகத்திற்கு இவ்வளவு பெரிய சோதனை ஏற்பட்டிருக்கிற சூழ்நிலையிலும் இன்னும் நம்பிக்கையோடு மகளிர் அணிச் சகோதரிகள் இருக்கிறார்கள் என்று சொன்னால், 2016 தேர்தலில் நிச்சயம் நாம்தான் வெல்வோம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு மகளிர் அணிச் சகோதரிகள் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறபோது, நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன் என்றார் ஸ்டாலின்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம்












Click it and Unblock the Notifications