மகன், மருமகனுடன் ஹாங்காங் பறந்த ஸ்டாலின்... முதல்வர் வேட்பாளர் புரமோசன் அறிவிப்பு வருமா?
சென்னை: உடல் பரிசோதனைகளுக்காக ஆண்டுதோறும் லண்டன் சென்று வரும் ஸ்டாலின் இம்முறை ஹாங்காங் சென்றிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சகோதரரின் மகன் திருமணத்தை வெற்றிகரமாக முடித்த ஸ்டாலின் அதே குஷியோடு தனது மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசனுடன் குழுவாக சென்றிருப்பதால் இந்த பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ஒருவார காலம் ஸ்டாலின் குழுவினர் ஹாங்காங்கில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2016 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் தயாராகி வரும் நிலையில் திமுக பொருளாளர் ஸ்டாலினும் அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்யத்தொடங்கி விட்டார். சட்டமன்ற தேர்தலை முதல்வர் வேட்பாளர் என்ற புரமோசனுடன்தான் சந்திக்க வேண்டும் என்று திட்டத்தோடுதான் தமிழகம் திரும்புவாராம் ஸ்டாலின்.
மதுரை பொதுக்கூட்டத்திற்கு வந்த கூட்டத்தைப் பார்த்து உற்சாகமடைந்த ஸ்டாலின், திருச்சி அல்லது கோவையிலும் அதேபோல பொதுக்கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளாராம். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டால் அதே கெத்தோடு மாநிலம் முழுவதும் பிரம்மாண்ட கூட்டங்களை நடத்தலாம் எனவும் முடிவெடுத்துள்ளாராம் ஸ்டாலின். ஆனால் இந்த முடிவுக்கு கருணாநிதி கிரீன் சிக்னல் கொடுக்கும் மனநிலையில் இருந்தாலும் கூட்டணிக் கட்சிகளை மனதில் வைத்து தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
ஸ்டாலினின் ஹாங்காங் பயணம் நல்லதொரு திருப்பத்தை தருமா என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் அவரது ஆதரவாளர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications