மேஜர் முகுந்த் குடும்பத்திற்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் ஈடாகாது: மு.க.ஸ்டாலின்
சென்னை: மறைந்த மேஜர் முகுந்தின் குடும்பத்திற்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் போதாது என்று திமுக செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேஜர் முககுந்த வரதராஜன் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி படுகாயம் அடைந்து வீர மரணம் அடைந்தார்.

சென்னை கிழக்கு தாம்பரம் புரபசரஸ் காலனியில் வசித்து வரும் மறைந்த மேஜர் முகுந்தின் மனைவி இந்துரிபெக்கா வர்கீஸ், அவரது மூன்று வயது மகள் அர்ஷியா, தந்தை வரதராஜன், தாய் கீதா ஆகீயோரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த மேஜர் முகுந்தின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்த்து வீரமரணமடைந்த சென்னையைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பிலும், தலைவர் கலைஞர் அவர்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டுக்காக அவர் செய்த இந்த உயிர் தியாகம், அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் கூறினாலும் போதாது. நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்து வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications