செயலற்ற அரசின் அலட்சியத்தால் அப்பாவிகளின் உயிர்கள் பறிபோவது வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின்
சென்னை: சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு கடையும் கிடங்கும் உள்ள இடத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

அண்மைக் காலமாக தீபாவளி பண்டிகை நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய வெடிவிபத்துகள் நிகழ்வது அதிகரித்து வருகிறது. அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் அருகே புளிச்சப்பள்ளத்தில் ஒரு பட்டாசு ஆலை வெடித்ததில் 5 பேர் மரணமடைந்தனர்.
பண்டிகை காலங்களில் பட்டாசு உற்பத்தியும், விற்பனையும் அதிகமாக இருக்கும் என்பதால் வெடிமருந்துகளின் பயன்பாடும் கூடுதலாக இருக்கும். அத்தகைய நேரத்தில் உரிய பாதுகாப்பு முறைகள் கையாளப்படுகின்றனவா என்பதை பரிசோதிப்பதுடன் காவல்துறை-தீயணைப்புத்துறை ஆகியவையும் கூடுதல் கவனம் எடுத்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. செயலிழந்துள்ள தமிழக அரசு இத்தகைய பணிகளில் அலட்சியம் காட்டுவதன் விளைவாக அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்படுகிறது.
இனியாவது அலட்சியம் காட்டாமல் துரிதமாக செயல்பட்டு, பண்டிகை நேர விபத்துகளைத் தடுத்து, உயிர்ப்பலி ஏற்படாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதுடன், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், பாதிப்படைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடுபவர்களுக்குத் தேவையான அவசிய சிகிச்சையையும் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications