தம்பி கருப்பு சிவப்பு கலர்ல டி சர்ட் இருக்காப்பா?... ஷாப்பிங்கில் குதித்த மு.க.ஸ்டாலின்
சென்னை: பிசியான அரசியல் ஓட்டத்திற்கு மத்தியில் ஜில்லென்று ஒரு ஷாப்பிங்கில் ஈடுபட்டார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
சென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள எக்ஸ்பிரஸ் மாலுக்குச் சென்ற அவர் டி சர்ட் வாங்கினார். கூடவே சுடச் சுட காபியும் சாப்பிட்டார்.
இந்த திடீர் ஷாப்பிங்கை தனது பேஸ்புக்கிலும் அப்டேட் செய்துள்ளார் மு.க. ஸ்டாலின்.

ஜாலி அரசியல்
முன்பு போல இல்லை இக்காலத்து அரசியலும், அரசியல்வாதிகளும். முன்புதான் கதர்ச் சட்டை அல்லது வெள்ளைச் சட்டி, வேட்டி கசங்காமல் அரசியல் செய்தார்கள் அக்காலத்து அரசியல்வாதிகள். இப்போது அப்படி இல்லை. மாடர்ன் அரசியல்வாதிகளாக மாறி நிற்கிறார்கள்.

ஜீன்ஸ் போட்ட சீமான்
சீமான் ஜீன்ஸ் போட்டு அரசியல் செய்கிறார். பண்ருட்டி வேல்முருகனும் பேன்ட் சட்டை போட்டு வருகிறார். டாக்டர் அன்புமணியும் அப்படித்தான்.

கூலர் போட்டு கூலாக
வைகோ அவ்வப்போது பேன்ட் டிசர்ட் பிளஸ் கூலருடன் கலக்குவார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் அப்படித்தான் எதார்த்தமாக இருக்கிறார். பெரும்பாலும் வேட்டி சட்டையில் வலம் வரும் அவர் அவ்வப்போது ரிலாக்ஸ்டாக பேன்ட், டி சர்ட்டில் வந்து போவார்.

எக்ஸ்பிரஸ் மாலில் ஷாப்பிங்
இந்த வகையில் திடீரென எக்ஸ்பிரஸ் மால் வணிக வளாகத்திற்கு வந்த ஸ்டாலின் அங்குள்ள ஒரு கடையில் சில டிசர்ட்களை பர்ச்சேஸ் செய்தார்.

சிவப்புக் கலர் சூப்பர் தலைவா!
அவர் போட்டிருந்த சிவப்பு கலர் டி சர்ட்டே செம ஸ்டைலிஷாக இருந்தது. அதைத்தான் கடைக்காரர்கள் பலரும் வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். ஸ்டாலினோ தனக்குப் பிடித்த டி சர்ட்களை கடை ரேக்குகளில் தேடி எடுத்து தேர்வு செய்தார்.

அண்ணனுக்கு ஒரு கப் காப்பி
அடுத்து பர்ச்சைஸே முடித்த கையோடு சூடாக ஒரு கப் காபி சாப்பிட்டார் அங்கிருந்த ஸ்டால் ஒன்றில். அவரைப் பார்த்ததும் கடைக்காரர்கள் பலரும் கை கொடுத்தார்கள். கூட நின்று போட்டோவும் எடுத்துக் கொண்டனர். எல்லோருக்கும் புன்முறுவலுடன் போஸ் கொடுத்தார் ஸ்டாலின்.

கடமை அழைக்கிறது.. வர்ட்டா
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு தனது பணிகளைக் கவனிக்கக் கிளம்பிச் சென்றார் ஸ்டாலின். இந்த திடீர் ஷாப்பிங்கைப் பற்றி தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்.
-
ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்.. உண்மை அவருக்கு தெரியாமாலேயே போயிருச்சு! அன்புமணி அட்டாக்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications