கோபப்படுங்கள்... கொதித்தெழுங்கள்... சொல்கிறார் ஸ்டாலின்
சென்னை: நமக்கு நாமே பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின் ‘முடியட்டும் விடியட்டும்' என்ற முழகத்தோடு மக்களை சந்தித்து வருகிறார். கன்னியாகுமரியில் பயணத்தை தொடங்கியுள்ள ஸ்டாலின், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி என முதற்கட்ட பயணத்தில் மக்களை சந்திக்கப் போகிறார் ஸ்டாலின்.
ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தை விளக்கும் வகையில் அரைமணிநேரம் குறும்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் நிலைமையினை விளக்கும் வகையில் அந்த குறும்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.
வேலையில்லா திண்டாட்டம், குடிநீர் பிரச்சினை, மின்சார தட்டுப்பாடு, பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என பல பிரச்சினைகளை கடிதம் வாயிலாக மக்கள் ஸ்டாலினுக்கு எழுதியுள்ளனர்.
இவற்றைப் பார்க்கும் போது, கேட்கும் போது கோபம் வரவில்லையா? கோபப்படுவதோடு நிறுத்திவிடாதீர்கள்... கொதித்து எழுங்கள் என்கிறார் ஸ்டாலின்.
வீடியோவில் திமுக தலைவர் கருணாநிதியும் அதிமுக ஆட்சிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளார். இறுதியில் முடியட்டும் விடியட்டும் என்ற பாடல் ஒலிக்க தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி விட்டார் ஸ்டாலின். இந்த ஆட்சி முடியட்டும் விடியட்டும். தலைவர் கலைஞர் ஆசியோடு உங்களை சந்திக்க வருகிறேன் என்று கூறுகிறார் ஸ்டாலின்.
வீடியோவில் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை என பக்கா அரசியல்வாதியாக கலக்கும் ஸ்டாலின், நமக்கு நாமே பயணத்தில் பெட்டிக்கடையில் டீ குடிப்பது... மக்களுடன் கை குலுக்குவது... ஆட்டோவில் புட் போர்டு அடிப்பது... ரோஸ் கலர் சிங்குச்சா... புளு கலர் சிங்குச்சா என கலர் கலர் சட்டையில் கலக்கி வருகிறார்.
ஸ்டாலினை பார்க்க மக்கள் என்னவோ கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். இவை எல்லாம் வாக்குகளாக மாறுமா? 2016 சட்டசபை தேர்தல் பதில் சொல்லும்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications