புதுப்பிக்கப்பட்டுள்ள என் வெப்சைட்டில் உள்ள சிறப்பம்சங்கள்... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதை ஸ்டாலினே தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

தனது புதுப்பிக்கப்பட்டுள்ள இணையதளத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

இதுதொடர்பாக பேஸ்புக்கில் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

கருத்துப் பரிமாற்றத்த மேலும் ஊக்கப்படுத்த

கருத்துப் பரிமாற்றத்த மேலும் ஊக்கப்படுத்த

கழகத் தொண்டர்களுடன் நடைபெற்று வரும் கருத்துப் பரிமாற்றத்தை மேலும் ஊக்கப்படுத்தி வலுப்படுத்தும் வகையில் இன்று முதல் என் வெப்சைட் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன்

பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த வெப்சைட் அருமையான தோற்றம் கொண்டதாக இருக்கிறது.

பயன்படுத்த எளிமை

பயன்படுத்த எளிமை

பயன்படுத்துவோருக்கு எளிமையாகவும், நிகழ்வுகளின் முழுத்தகவல்கள் அடங்கியதாகவும், அதை விட முக்கியமாக சிறப்பான முறையில் நமக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள பேருதவியாகவும் இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எளிதாக அணுகலாம்

எளிதாக அணுகலாம்

புதிய பொலிவுடன் இன்று துவங்கியுள்ள இந்த வெப்சைட் மூலம் அனைவரும் மிகவும் எளிதாக என்னை அணுகலாம்.

இரு மொழிகள்

இரு மொழிகள்

1) இரு மொழிகள்: தமிழ். ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெப்சைட்டை தொடர்பு கொள்ளலாம். தமிழ் வெப்சைட் தொடர்பு கொள்ள : http://mkstalin.in/tamil/. ஆங்கில வெப்சைட் தொடர்பு கொள்ள: http://mkstalin.in/

ஸ்டாலின் கனெக்ட்

ஸ்டாலின் கனெக்ட்

2) ஸ்டாலின் கனெக்ட்: இதன் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகள், புகார்கள், நிகழ்வுகள் குறித்த கருத்துக்கள் போன்றவற்றை தெரிவிக்கலாம். அவை உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு http://mkstalin.in/stalin-connect.php என்ற link-யைப் பயன்படுத்தலாம்.

தன்னார்வத் தொண்டராகலாம்

தன்னார்வத் தொண்டராகலாம்

3) நீங்களும் தன்னார்வத் தொண்டராகலாம் (Volunteers): தமிழகத்திற்கான என் தொலை நோக்கு பார்வையுடன் பங்கேற்க தன்னார்வத்துடன் முன் வருவோர் http://mkstalin.in/become-a-volunteer.php என்ற link-யைப் பயன்படுத்தி தங்களை தொண்டர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.

கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி

4)கொளத்தூர் சட்டமன்ற தொகுதி: 2011 சட்டமன்ற தேர்தலில் என்னை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பிய கொளத்தூர் தொகுதிக்கு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறேன். அதிலும் குறிப்பாக கொளத்தூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியினை ஒதுக்கீடு செய்வதிலும், பொறுப்பாக செலவிடுவதிலும் வெளிப்படத்தன்மையை கடைப்பிடித்து வரும் நான், எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு பற்றிய தகவல்களை பொதுமக்கள் பார்வைக்கு இந்த வெப்சைட்டில் பதிவு செய்துள்ளேன். ஆகவே கொளத்தூர் தொகுதி மக்கள் இந்த எம்.எல்.ஏ நிதியினை வளர்ச்சிப் பணிகளுக்கு மேலும் ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது, அது தொடர்பான ஆலோசனைகள், புகார்கள் ஏதுமிருப்பின் அவற்றை இந்த வெப்சைட் மூலம் என் கவனத்திற்கு கொண்டு வரலாம்.

மக்கள் பணியில் கழக செயல்வீரர்கள்

மக்கள் பணியில் கழக செயல்வீரர்கள்

5) மக்கள் பணியில் கழக செயல்வீரர்கள்: கழகத் தொண்டர்கள் பல மாவட்டங்களில் மக்களுக்காக வியத்தகு சேவைகளைச் செய்கிறார்கள். ஆனால் போதிய தகவல் பரிமாற்றம் இல்லாததால் அவை வெளி உலகத்திற்கு தெரியாமல் போகிறது. அந்தக் குறையைப் போக்குவதற்கு இந்த வெப்சைட்டில் வழி வகை காணப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தங்கள் பகுதிகளில் கழகச் செயல்வீரர்கள் செய்யும் மக்கள் பணிகளை வெப்சைட்டில் உள்ள "Cadre in Action" என்ற பகுதியில் http://mkstalin.in/cadre-in-action.php என்ற லிங்கைப் பயன்படுத்தி தகவல் மற்றும் படங்களுடன் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கழக செயல்வீரர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

அணுகுவதற்கு

அணுகுவதற்கு:http://mkstalin.in/., http://mkstalin.in/tamil/ என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+