குடியரசு தின விழாவில் குற்றவாளிக்கு துதி பாடுவதா?: ஸ்டாலின்
சென்னை: குடியரசு தின விழாவில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு வெறுக்கத்தக்க வகையில் துதி பாடியதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின், வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கு அவமானத்தையும் அவமரியாதையையும் ஏற்படுத்தி வருகிறது.
டெல்லியில் உள்ள அரசு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை சிறப்பிக்கும் வகையில் குடியரசு விழாவை கொண்டாடியுள்ளது. ஆனால், தமிழக அரசு சிறை தண்டனை பெற்றவரின் படத்தை காட்டி வெறுக்கத்தக்க வகையில் துதி பாடுகிறது.
தலை சிறந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழகம் இப்படி தர்ம சங்கடப்படுவதும் இகழ்ச்சிக்கு உள்ளாவதையும் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படும் விதத்தில் நடந்து கொண்ட இந்த அரசு ஆட்சியில் இருப்பதற்கான தார்மீக உரிமையை இழப்பதோடு மட்டுமன்றி தமிழக மக்களிடமும், இந்திய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என கூறியுள்ளார்.
-
துரை வைகோ விஜய்யை சந்தித்த அடுத்த நிமிடம்.. ஸ்டாலின் கொடுத்த ‘கிரீன் சிக்னல்.. அலறும் மதிமுக? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications