ஜல்லிக்கட்டு... என்ன 'டபுள் ஆக்ட்' கொடுக்கிறீங்களா?.. பாஜக அரசை விளாசும் மு.க.ஸ்டாலின்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை மீறிய பாஜக அரசு ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் உச்சநீதிமன்றத்தை சாக்கு சொல்கிறது என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசு இரட்டை வேடம் போட்டு வருகிறது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்து வருகிறது. மாணவர்கள், இளைஞர் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் சென்னைக்கு வரும் போதெல்லாம் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு கண்டிப்பாக நடக்கும் என்று பேசி வந்த நிலையில், நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் அனில் மாதவ், ஜல்லிக்கட்டு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பின்னரே எந்த முடிவையும் எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜகவின் இரட்டை வேடம் அம்பலப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் 4 நாட்களில் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது, ஒத்துக் கொண்ட மத்திய அரசு, பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்தது. ஆனால், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு மட்டும் உச்சநீதிமன்றத்தை சாக்கு சொல்வது என்பது பாஜகவின் இரட்டை வேடத் தன்மையை வெளிக்காட்டியுள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications