For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்க முயற்சி செய்திருக்கிறார்கள் - ஸ்டாலின் கிண்டல்

பினாமி ஆட்சியின் பட்ஜெட் இது பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்க முயற்சி செய்திருக்கிறார் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் என்றும் பினாமி ஆட்சியின் முதல் பட்ஜெட்டில் பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்றும் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

2017 - 18ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்து வாசித்தார்.

பினாமி பட்ஜெட்

பினாமி பட்ஜெட்

இந்த பட்ஜெட் பற்றி எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா பினாமி அரசின் முதல் பட்ஜெட் என்று கிண்டலடித்தார்.

அமைச்சர்கள் எங்கே?

அமைச்சர்கள் எங்கே?

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது நான்கு அமைச்சர்கள் சட்டசபையில் இல்லை அவர்கள் எங்கே போனார்கள்? சசிகலாவை பார்க்க பெங்களூரு சிறைக்கு சென்றார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

எதுவும் இல்லை

எதுவும் இல்லை

இந்த பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இல்லை. புதிய மந்தையில் பழைய கள் என்று கூறிய ஸ்டாலின், அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

கடன் சுமை அதிகரிப்பு

கடன் சுமை அதிகரிப்பு

தமிழகத்தின் கடன் சுமை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அதிகரித்து வருகிறது. ஜெயலலிதா ஆட்சி முதல் எடப்பாடி ஆட்சி வரை கடன்தான் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்க முயற்சி செய்துள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் கிண்டடித்துள்ளார்.

English summary
Opposition leader Stalin talks about TamilNadu budget. Stalin slammed the Tamil Nadu Government's budget is Zero No major relief for farmers he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X