செயல் தலைவரானாலும் திமுக பொருளாளர் பதவியும் மு.க.ஸ்டாலினுக்குத்தான்!
மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் பொறுப்புடன் செயல் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக மேற்கொள்வார் என கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
சென்னை: சென்னையில் அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவராக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சி பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்மொழிய, முதன்மை செயலாளர் துரைமுருகன் வழிமொழிய திமுக செயல் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே கட்சி விதி 18-பிரிவு 4ன் கீழ் திருத்தம் கொண்டுவரப்பட்டு ஸ்டாலின் செயல் தலைவரானார்.

அவர் தற்போது வகித்து வரும் பொருளாளர் பொறுப்புடன் செயல் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக மேற்கொள்வார் என கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்தார். மேலும், செயல் தலைவர் என்றாலும், கட்சி தலைவருக்கு உரிய அனைத்து அதிகாரங்களும் ஸ்டாலினுக்கு உண்டு என்றும், அன்பழகன் தெரிவித்தார்.
திமுக வரலாற்றில் முதல் முறையாக, கட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. திமுகவின் முதலாவது செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல பொருளாளர் பதவியில் இருப்பவர்களுக்கு கூடுதலாக ஒரு பெரிய பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை.
கட்சியில் அடுத்த தலைமுறை தலைவர்கள் வளர்த்தெடுக்கப்படவில்லை என்ற தோற்றத்தை இந்த நிகழ்வு காண்பிக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications