திமுக பொதுச்செயலர் அன்பழகன் 95-வது பிறந்த நாள்- ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து
இன்று தனது 95-வது பிறந்த நாளை கொண்டாடும் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 95-வது பிறந்த நாளையொட்டி, திமுக பொருளாளர் ஸ்டாலின் நேரில் சென்று தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இன்று 95-வது பிறந்தநாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அன்பழகனுக்கு வீட்டுக்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மு.க.அழகிரி உள்ளிட்டோரும் அன்பழகனு்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை:

கழகத்தினருக்கு கொள்கை வகுப்பெடுக்கும் பேராசிரியர். தலைவர் கருணாநிதியின் அரசியல் பயணத்தில் என்றென்றும் தோள் கொடுத்து துணை நிற்கும் தோழர். எமக்கு ஊக்கமளித்து ஆக்கப்பூர்வ ஆலோசனைகள் வழங்கும் நல்லாசான். இரு வண்ணக் கொடியும், பகுத்தறிவு-சுயமரியாதை கொள்கைகளும் காலத்தால் அழியாத செல்வங்கள்

என்பதை உணர்ந்து இலட்சிய வாழ்வு வாழும் பெருந்தகை. நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தை 94 வயதிலும் கட்டிக்காக்கும் உறுதி மிக்க உள்ளம். முதுமையை வயதுக்கு மட்டும் அளித்துவிட்டு, சிந்தனையில் எப்போதும் இளமையாகவும் வலிமையாகவும் இருக்கும் பேராசிரியர் பெருந்தகை நூறாண்டு கடந்தும் நலமுடன் வாழ்ந்து கழகத்திற்கும் தலைவர் கருணாநிதிக்கும் என்றென்றும் துணை நிற்க வணங்குகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications