வட மாநிலங்களில் தொடரும் அகழ்வாய்வு.. தமிழகத்தில் மட்டும் நிறுத்துவதா.. மு.க. ஸ்டாலின் கடிதம்
இந்தியாவின் வட பகுதிகளில் நடைபெறும் அகழ்வாய்வுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழ் நாட்டில் மட்டும் இதுபோன்ற ஆய்வுகளை நிறுத்துவதா என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: மதுரை அருகில் உள்ள கீழடி அகழ்வாய்வை தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று கோரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இதுபோன்ற ஆய்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லாத போது, தமிழகத்திற்கு மட்டும் ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் நெடிய வரலாற்றையும், பழந்தமிழர் நாகரிகத்தையும் வெளிக்கொணரும் கீழடி அகழ்வாய்வை தொடரவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மாவிற்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க, பழமையான பகுதிகளில் ஒன்றான, மதுரை - சிவகங்கை மாவட்டங்களுக்கு எல்லையாக இருக்கக் கூடிய சிலைமான் என்ற பகுதிக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் நடைபெற்று வந்த அகழ்வாய்வுப் பணிகளை நிறுத்த, மத்திய தொல்லியல் ஆலோசனைக்குழு எடுத்துள்ள துரதிருஷ்டவசமான முடிவை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
தமிழர் வாழ்வியல் சான்று
இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் சார்பில் இப்பகுதியில், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளில் இருந்து கிடைத்துள்ள பழமையான சான்றுகளின் மூலம், தமிழர்களின் நாகரிகம், வாழ்வியல் வரலாறு ஆகியவை 2500 ஆண்டுகளுக்கும் முந்தையதாக கருதப்படும் முக்கியத்துவம் வாய்ந்த சங்க கால நாகரிகச் சின்னமாக, கீழடி இருப்பது தெரிய வந்துள்ளது.
அரிய பொருட்கள்
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல், வைகை நதிப்படுகையை ஒட்டியுள்ள, தேனி முதல் ராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக, 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் 6வது அகழ்வாய்வுப் பிரிவு, கீழடியில் மேற்கொண்ட ஆய்வில், பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்திய கிணறுகள், சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள், பானையோடுகள் மற்றும் மண்பாண்டப் பொருட்கள், எலும்புகளால் ஆன ஆபரணங்கள் உள்ளிட்ட பலவித பழங்கால ஆபரணங்கள், இரும்பாலான குத்தீட்டிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பீங்கான் ஓடுகள் ஆகிய குறிப்பிடத்தக்க, முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு
தமிழகத்தின் பண்டைய கால, உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் மாநில மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், கீழடி அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்வதை தடுத்து நிறுத்தவும், இந்த ஆய்வை மேற்கொள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை திடீரென நிறுத்தவும் எடுக்கப்பட்டுள்ள முடிவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் இதுபோன்ற அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித தடங்கலும் இன்றி தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
அகழ்வாய்வு சீர்குலைவு
தொல்லியல் துறையால் திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை தமிழக மக்கள் கடுமையாக எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், இந்த முடிவு அவர்களை பெரும் அதிருப்திக்கும், ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கி இருக்கின்றது. மேலும், பழம்பெரும் தமிழகத்தின் உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டு வரும் கீழடி அகழ்வாய்வை சீர்குலைக்கும் முயற்சியில், மத்திய தொல்லியல் ஆலோசனைக்குழு ஈடுபடுகிறதோ என்ற சந்தேகமும் தமிழக மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் ஆலோசனைக்குழுவின் இதுபோன்ற ஒருதலைப்பட்சமான, நியாயமற்ற முடிவுகளால், தமிழக மக்களின் உணர்வுகள் எந்தவகையிலும் காயப்படக்கூடாது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
வேண்டுகோள்
ஆகவே, இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தின் தொல் வரலாற்றையும், கலாச்சாரத்தையும், மதிப்புமிக்க பழங்கால நாகரிகத்தையும் கண்டறிய, கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளவும், அதற்குத் தேவையான நிதியை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு ஒதுக்கீடு செய்யவும், மத்திய தொல்லியல் ஆலோசனைக்குழு அனுமதியளிக்க உடனே நடவடிக்கை வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அப்படி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், தமிழக மக்கள் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையை என்றைக்கும் நினைவுகூர்வார்கள் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என நான் உளப்பூர்வமாக நம்புகிறேன் என்று மு.க. ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications