92 வயதினிலே... தொண்டர்களின் பாசம் + பண மழையில் நனைந்த கருணாநிதி!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி,இன்று தனது 92-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் வழக்கமான உற்சாகத்துடன் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாலை 4.45 மணிக்கு சென்னை சி.ஐ.டி.யு. காலனியில் உள்ள வீட்டில் தாய்-தந்தை படத்துக்கு மாலை அணிவித்தார். அப்போது ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள். பின்னர் மரக்கன்று நட்டார் கருணாநிதி.

கோபாலபுரத்தில் வரவேற்பு
அதிகாலை 5.07 மணிக்கு கோபாலபுரம் வந்த கருணாநிதிக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மனைவி தயாளு அம்மாள், மகள் செல்வி, மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மு.க.தமிழரசு, முரசொலி செல்வம், தயாநிதி மாறன் மற்றும் குடும்பத்தினர் வாழ்த்து கூறினார்கள்.

அரசியல் கட்சியினர் வாழ்த்து
முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், இயக்குனர் அமிர்தம், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர் பாபு, சுதர்சனம், மா.சுப்பிரமணியன், காந்திசெல்வன், செல்வராஜ், ஆவடி நாசர், நிர்வாகிகள் படப்பை மனோகரன், பம்மல் கருணா, துறைமுகம் காஜா, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ண சாமி, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அண்ணாவிற்கு மலர்வளையம்
பின்னர் கருணாநிதி மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பெரியாருக்கு அஞ்சலி
வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கு கி.வீரமணி அவரை வரவேற்றார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர். கோபாலபுரம் சென்ற கருணாநிதி அங்கு பிரமுகர்களை சந்தித்தார்.

ரஜினி, ராமதாஸ் வாழ்த்து
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பூச்செண்டு கொடுத்து அனுப்பினார்.

ஆளுநர் ரோசய்யா
தமிழக ஆளுநர் ரோசையா வாழ்த்துச்செய்தி அனுப்பி இருந்தார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசர், த.மா.கா. துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சுப.வீர பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

காத்திருந்த தொண்டர்கள்
11 மணிக்கு அறிவாலயம் சென்ற அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கருணாநிதிக்கு வாழ்த்து கூற தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த தி.மு.க. தொண்டர்கள் வரிசையில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

பணமாலைகள்
தலைவருக்கு வாழ்த்து கூற காலை முதலே கையில் பணமாலையுடனும், பொன்னாடைகளுடனும் காத்திருந்த தொண்டர்கள் கருணாநிதியை அருகில் நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் உற்சாகமடைந்தனர். பணமாலைகளை ஸ்டாலினின் கையில் கொடுத்து விட்டு கருணாநிதியை வணங்கிச் சென்றனர். கருணாநிதியின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயம் பகுதியே திருவிழா கோலம் பூண்டுள்ளது
-
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம்












Click it and Unblock the Notifications