மதனை இன்னுமா கண்டுபிடிக்கல... கேஸை வேறு அமைப்புக்கு மாற்றவா? - நீதிபதிகள் அதிரடி
சென்னை: வேந்தர் மூவீஸ் மதனைக் கண்டுபிடிக்க போலீசார் மேலும் தாமதப்படுத்தினால் வழக்கை வேறு அமைப்புக்கு மாற்றிவிடப் போவதாக சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்த மதன். கடந்த மே மாதம் திடீரென தலைமறைவானார்.
அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிடகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவரது தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

ராதாகிருஷ்ணன் தலைமையில்
இந்த மனு மீதான விசாரணையில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித் தருவதாக கூறி பல மாணவர்களிடம் பெரும் தொகை மோசடி செய்ததாக மதன் மீது புகார் வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து மதன் காணாமல் போன வழக்கு, அவர் மீதான மோசடி வழக்குகள் ஆகியவை குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் அறிக்கை
இந்த தனிப்படை அதிகாரிகள், அவ்வப்போது தங்களது விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனிப்படை அதிகாரிகள், தங்களது புலன் விசாரணை குறித்து அறிக்கையை தாக்கல் செய்தனர்.

கடும் கண்டனம்
இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், போலீசாரின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
"இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு 70 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை போலீசாரின் புலன் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. மாணவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக சுகுமாரன், ரங்கபாஷியம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இதுவரை இருவரையும் போலீசார் விசாரிக்கவில்லை.
சுகுமாரன் வெளிநாட்டில் இருப்பதாக கடந்த முறை தாக்கல் செய்த அதே அறிக்கையை தற்போது போலீசார் தாக்கல் செய்துள்ளனர். ரங்கபாஷியத்தை இதுவரை விசாரிக்கவில்லை.

வேறு புலனாய்வு அமைப்பிடம்
பொதுவாக ஒரு வழக்கை தமிழக போலீசாரால் திறம்பட விசாரிக்க முடியவில்லை என்றால், வழக்கை வேறு ஒரு புலன் விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கலாம்.
எனவே, இந்த வழக்கு புலன் விசாரணையின் நிலை அறிக்கையை நாளை (வியாழக்கிழமை) தாக்கல் செய்யவேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், வழக்கை வேறு புலன்விசாரணை அமைப்புக்கு மாற்ற முடிவு செய்வோம்," என்று நீதிபதிகள் கூறினார்கள்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications