‘வேந்தர் மூவிஸ்’ மதன் உயிரோடு தான் இருக்கிறார்- ஹைகோர்ட்டில் போலீஸ் தகவல்
சென்னை: தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான வேந்தர் மூவிஸ் மதன் உயிரோடு தான் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவராக வலம் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன். அடுத்தடுத்து பெரிய படங்களைத் தயாரித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், 'காசியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக' கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதன் மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் தொடரப்பட்டன.

வழக்கு...
இதற்கிடையே தன் மகன் மதனைக் கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து மதனைத் தேடும் பணி தீவிரமானது.

விசாரணை...
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே போலீசார் நீதிமன்றத்தில் கால அவகாசம் வேண்டியிருந்தனர். அதன்படி, கால அவகாசம் முடிந்து இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

நெருங்கி விட்டோம்...
அப்போது போலீசார் அளித்த விளக்கத்தில், "மதன் உயிரோடு தான் இருக்கிறார். அவரது இருப்பிடத்தை நெருங்கி விட்டோம். எனவே மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும்" எனக் கோரினர்.

மீண்டும் கால அவகாசம்...
இந்த விளக்கத்தைக் கேட்ட நீதிபதி, ‘இனி மேல் கால அவகாசம் கேட்கக் கூடாது' என போலீசாரை எச்சரித்து ஒரு மாதத்திற்கு பதில் 4 வாரங்கள் கால அவகாசம் வழங்கினார். இதையடுத்து, இந்த வழக்கு ஆகஸ்ட் 17 ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications