மதன் விடுதலைக்காக வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராஹி வள்ளி அம்மனை வேண்டிய மனைவி, தாயார்
வழக்குகளில் இருந்து விடுதலையாவத்தாற்காக மதனின் மனைவியும் அவரது தாயாரும் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராஹி வள்ளி அம்மனை வழிபட்டு வேண்டிக்கொண்டனர்.
சென்னை: எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பணம் பெற்று ஏமாற்றி விட்டார் என்பது மதன் மீதான புகார். பணத்தை மருத்துவ கல்லூரி நிறுவனர் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டேன் என்றும் கங்கையில் போய் ஜலசமாதியாகப் போகிறேன் என்றும் கூறிவிட்டு மாயமான மதனை 6 மாதங்களுக்குப் பின்னர் திருப்பூரில் போலீசார் கைது செய்தனர்.
21ம் தேதி கைது செய்யப்பட்ட மதனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட மதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மதனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.மதன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல சினிமா தயாரிப்பார்கள், நடிகர்கள், எஸ்.ஆர். எம் நிறுவன தலைவர் பச்சமுத்து, அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விளக்கம் கேட்கப்பட்டது.
நேற்றுடன் அவரது 7 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததால் மதனை மீண்டும் சைதாப்பேட்டை 11-வது நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன் ஆஜர்படுத்தினார்கள். மீண்டும் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மதனை கோர்டுக்கு அழைத்து வந்ததை அடுத்து அவரது மனைவி, தாயார் ஆகியோர் வந்திருந்தனர். வேனில் ஏற்றிய மதனை, அவரது மனைவி வேன் அருகே சென்று பார்த்து பேசினார்.
மதன் விரைவில் வழக்கில் இருந்து விடுபட வேண்டும் சைதை நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராஹி வள்ளி அம்மன் கோவிலில் மதனின் தாயாரும், மனைவியும் என்று வேண்டிக்கொண்டனர்.
வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராஹி வள்ளி அம்மன் சக்தி வாய்ந்த அம்மனாகும். முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த போது அதிமுக வழக்கறிஞர் அணியினர் இந்த அம்மனை வேண்டி வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications