பண மோசடி செய்யுமளவுக்கு என் கணவர் மோசமானவர் அல்ல!- மதனின் முதல் மனைவி
சென்னை: பண மோசடி செய்யும் அளவுக்கு என் கணவர் மோசமானவர் இல்லை என்று வேந்தர் மூவீஸ் மதனின் முதல் மனைவி சிந்து கூறியுள்ளார்.
கங்கையில் மூழ்கி தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென்று தலைமறைவாகி விட்டார் மதன். அவர் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதனின் 2-வது மனைவி சுபலதா நேற்று முன்தினம் தனது கணவரை கண்டுபிடிக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

நேற்று மதனின் முதல் மனைவி சிந்து கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து கண்ணீர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், "காணாமல் போன எனது கணவர் மதனை கண்டுபிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 1996-ம் ஆண்டு எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு பிளஸ்-1 படிக்கும் வேதிகா என்ற மகள் இருக்கிறாள்.
அவர் காணாமல் போனதை அடிப்படையாக வைத்து பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.
பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தவறான தகவல்கள் செய்திகளாக வெளிவருகின்றன. அவர் பண மோசடி செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக அவதூறு பரப்புகிறார்கள். மோசடி செய்யும் அளவுக்கு அவர் மோசமானவர் அல்ல.
எஸ்.ஆர்.எம்.கல்விக்குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவிற்கு எனது கணவர் மிகவும் நெருக்கமாக இருந்தார். இது சிலருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவருக்கு மிரட்டல்கள் வந்தன. அந்த மிரட்டலும் சிலரது தூண்டுதலும்தான், எனது கணவர் காணாமல் போனதற்கு காரணமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இது தொடர்பாக உண்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் மனைவி சிந்து கொடுத்த புகார் மனு மீது விசாரணை நடத்த அண்ணாநகர் துணைக் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications