தீபா வீட்டுக்கு மாதவன் வந்துட்டார்... அப்போ டிரைவர் ராஜா எங்கே போனார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  Jayalalitha's niece deepa convinced by madhavan | Oneindia Tamil

  சென்னை: மாதவனும் தீபாவும் ஒன்றாக இணைந்ததுதான் இப்போதைய ஹாட் டாபிக். இந்த களேபரத்தில் தீபாவின் அருகிலேயே இருந்த டிரைவர் ராஜா எங்கே போனார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  கடந்த ஏப்ரல் மாதம் போயஸ்கார்டன் வாசலில் தீபா பேட்டி கொடுத்த போது ஒருபக்கம் மாதவன், மற்றொரு பக்கம் டிரைவர் ராஜா நின்று கொண்டிருந்தார். கண்ணீருடன் பேட்டி கொடுத்தார் தீபா. பின்னர் காரில் ஏற வந்த அவரை தீபா கண்டபடி திட்டினார்.

  அப்போது மாதவனை ஒருமையில் பேசிய போலீசை பார்த்து மிரட்டிய தீபா, என்னோட புருஷனை எப்படி நீ அப்படி சொல்லலாம் என்று கேட்டார். மாதவனின் பக்கம் தீபா செல்வதைப் பார்த்த டிரைவர் ராஜா,தீபாவை காரில் ஏறு என்று ஒருமையில் சொன்னார். ஆனால் தீபா தன்னுடைய கணவர் மாதவனின் அருகிலேயே நின்று கொண்டிருந்தார்.

  திட்டிய ராஜா... கண்டிக்காத தீபா

  திட்டிய ராஜா... கண்டிக்காத தீபா

  இதையெல்லாம் மாதவன் தனது செல்போனில் படம் பிடித்தார். இதைப் பார்த்த டிரைவர் ராஜா, கெட்ட வார்த்தைகளினால் மாதவனை திட்டினார். டேய்... பணத்தை திருட்டிட்டு ஓடின நாய் நீ எதுக்கு இங்க வந்தே... செல்போன்ல ஏன் வீடியோ எடுக்கிற என்று கூறி ஆபாசமாக திட்டினார்.

  அதற்கு தீபா, ஏய் ராஜா, நீ தேவையில்லாம பேசாதே என்று மென்மையாக கண்டித்தார்.

  டிரைவர் ராஜா எங்கே

  டிரைவர் ராஜா எங்கே

  போயஸ்கார்டன் வாசலில் தீபா, மாதவன், டிரைவர் ராஜா ஆகிய மூன்று பேருமே முட்டி மோதியது பரபரப்பை ஏற்படுத்தியது. மூன்று மாதங்களுக்குப் பிறகு தீபா வீட்டிற்கு மாதவன் வந்ததை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர் ஆனால் அந்த இடத்தில் டிரைவர் ராஜாவை காணவில்லை.

  தொண்டர்களின் உற்சாகம்

  தொண்டர்களின் உற்சாகம்

  தீபாவிற்கும் மாதவனுக்கும் சண்டை ஏற்பட முக்கிய காரணமே டிரைவர் ராஜாதான் என்று பேசப்பட்டது. தவறான வழி நடத்தல்களினால்தான் மாதவனை வீட்டை விட்டு துரத்தினார் தீபா. தற்போது தன்னை தவறாக வழி நடத்திய பலரையும் தீபா விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.

  பசும்பொன் பாண்டியன்

  பசும்பொன் பாண்டியன்

  தீபா பேரவை சார்பில் பல செயல்களை செய்த பசும்பொன் பாண்டியனை சில வாரங்களுக்கு முன்பாக பேரவையை விட்டு நீக்கினார் தீபா.

  ஜெயலலிதாவை திட்டமிட்டு கொடூரமான முறையில் பல இன்னல்களுக்கு ஆளாக்கி, சொந்த மகள் போன்ற என்னை பிரித்து வைத்த சசிகலாவின் கைக்கூலியாக வேலை பார்த்தவர் பசும்பொன் பாண்டியன் என்ற தகவல் தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன்.

  தினகரனின் ஒற்றர்கள்

  தினகரனின் ஒற்றர்கள்

  என்னுடைய கட்சி மற்றும் அரசியல் வளர்ச்சியை தடுப்பதற்காக ஜெ.தீபா அணியை முறையாக செயல்படவிடாமல் எங்கள் உள்கட்சி செயல்பாடுகளை ஒற்றர்களை வைத்து சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் தரப்பினருக்கும் தெரிவித்து கொண்டிருந்தார்.

  பசும்பொன் பாண்டியன் மற்றும் அவருடன் இணைந்து செயல்பட்டு வந்த வி‌ஷமிகளின் இந்த சதி திட்டம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தவுடன் அனைத்து பொறுப்பில் இருந்தும் அவர்கள் என்னால் நீக்கப்பட்டார்கள்.

  தீபா பேரவையில் குழப்பம்

  தீபா பேரவையில் குழப்பம்

  ஜெ.தீபா அணி கலைக்கப்பட்டது என்று போலியான தகவலை பரப்பி தொண்டர்கள் இடையே குழப்பங்களை ஏற்படுத்தி அவதூறான செய்திகளை பசும்பொன் பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். பசும்பொன் பாண்டியனின் கையாளாக செயல்பட்ட மதுரை மாவட்ட பொறுப்பாளர் பி.எம்.கார்த்திகேயனையும் நீக்குவதாக அறிவித்தார் தீபா.

  இணைந்த மாதவன்

  இணைந்த மாதவன்

  தீபாவை விட்டு பிரிந்திருந்த மாதவன் நேற்று தீபா வீட்டிற்கு வந்தார். இருவரும் ஒன்றாக இணைந்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஜெயலலிதாவின் சமாதிக்கு போய் மலர் வளையம் வைத்து வணங்கினர். அப்போது ராஜா உடன் இல்லை.

  ராஜாவை நீக்கிவிட்டாரோ

  ராஜாவை நீக்கிவிட்டாரோ

  டிரைவர் ராஜாவை வேலையை விட்டு தீபா நீக்கியிருப்பாரோ என்று பலரும் பேசிக்கொண்டனர். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளராக முதலில் ராஜாவை அறிவித்தார் தீபா, அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே உடனே மாற்றினார். இப்போது பேரவையை விட்டு ராஜாவை துரத்தி விட்டு விட்டாரோ அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. எப்போ எது நடக்கிறது என்றே கூற முடியாது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Where is AV Raja workers asked Deepa. Raja who is Driver from the MGR Amma Deepa (MAD) Peravai Deepa.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற