சட்டசபையில் 'சரக்கு' ... ஆதரிப்பீர் 'குமாரசாமி'யை.. ஆர்.கே.நகரில் ஆரம்பித்தது அலம்பல்!
சென்னை: குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு என்பார்கள்.. அதேபோல மற்றவர்களை விட குடிகாரர்கள்தான் மிகத் "தெளிவாக"ப் பேசுவார்கள் என்றும் சிலர் அடித்துக் கூறுவார்கள்.. அதை உணமையாக்கி விட்டது தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்!
ஆர்.கே. நகர் தொகுதி குறித்து அரசியல் கட்சியினர் ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருக்க, மது குடிப்போர் சங்கமானது, வேட்பாளரையே அறிவித்து போஸ்டரும் ஒட்டி களத்தில் குதித்து களேபரப்படுத்தியுள்ளது.

என்ன காமெடி என்றால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்காக அவர்கள் அறிவித்துள்ள வேட்பாளரின் பெயர் குமாரசாமி என்பதாகும்!
இதுதொடர்பாக அந்த சங்கத்தினர் ஒரு போஸ்டர் போட்டுள்ளனர். வழக்கம் போல மது புட்டியுடன் கூடிய அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள வாசகம்...
குடிக்கப் பிறந்த கூட்டமல்ல தமிழா... குடும்பக் குலப் பெருமை காக்கப் பிறந்த கூட்டமடா தமிழா...
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளப் பெருமக்களே
மதுவால் கணவனை இழந்த பெண்கள், அப்பாவை இழந்து அநாதைகளான குழந்தைகள், மகனை இழந்து மன வேதனையால் வாடும் அப்பா, அம்மாவிற்கு மாதந்தோறும் வாழ்வுரிமைத் தொகை ரூ. 3000, டாஸ்மாக் லாபத்திலிருந்து கிடைத்திட, மது சிகிச்சைக்கு தனி மருத்துவமனை அமைத்திட, சென்னை மாநகர மதுக் கடைகளை தீவுத் திடலுக்கு திசை திருப்பிட சட்டசபையில் சரக்கு பற்றிப் பேசிட...
உங்கள் வேட்பாளர் பொன். குமாரசாமி அவர்களுக்கு ஆதரவு தாரீர் தாரீர்... என்று போட்டு அசத்தியுள்ளனர் இந்த குடிகாரர்கள்.
வெளங்கிரும் செல்லாக்குட்டிகளா ... "சியர்ஸ்" கண்ணுங்களா!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications