அதிமுகவில் இருந்து மதுசூதனன் அதிரடி நீக்கம்! புதிய அவைத் தலைவராக செங்கோட்டையன்!
அதிமுகவில் இருந்து மதுசூதனன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் புதிய அவைத் தலைவராக கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: அதிமுகவில் இருந்து அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா அறிவித்துள்ளார். அதிமுகவின் புதிய அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தலைமையில் இரண்டாக பிளவுபட்டுள்ளது. முதல்வர் ஓபிஎஸ் அணியில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனும் இணைந்துவிட்டார்.

அதிமுகவின் தாற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா அறிவிக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்கக் கோரி மனு அனுப்பியிருந்தார் மதுசூதனன். தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவில், அதிமுகவின் சட்ட விதிகளின்படி தாற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே இல்லை, அப்படி யாரையும் தேர்வு செய்யவே முடியாது என்று கூறியிருந்தார் மதுசூதனன்.
அதிமுகவில் இருந்து மதுசூதனன் அதிரடி நீக்கம்! புதிய அவைத் தலைவராக செங்கோட்டையன்! pic.twitter.com/KpHUBz5b4c
— Oneindia Tamil (@thatsTamil) February 10, 2017
இந்த நிலையில் மதுசூதனனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா இன்று அறிவித்துள்ளார். மேலும் அதிமுகவின் புதிய அவைத் தலைவராக கே.ஏ. செங்கோட்டையனை நியமித்துள்ளார் சசிகலா.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications