ஆர்.கே. நகரில் மனு தாக்கல் செய்யும் முன் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ., நினைவிடத்தில் ஆசி பெற்ற மதுசூதனன்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் முன் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். மனு தாக்கல் செய்யும் முன்பாக தனது அணியினர் ஓ.பன்னீர்
செல்வம், நத்தம் விஸ்வ நாதன் உள்ளிட்டோருடன் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதா மறைவினால் காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதி ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சசிகலா அணி சார்பில் டிடிவி
தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், பாஜக வேட்பாளராக கங்கை அமரன், திமுக வேட்பாளராக மருதுகணேஷ், தேமுதிக வேட்பாளராக மதிவாணன், நாம் தமிழர் கட்சியின்
கலைக்கோட்டுதயம் ஆகியோர் களத்தில் உள்ளனர். பலமுனை போட்டி நிலவுகிறது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். சசிகலா அணியின் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இவர்கள் இருவருக்கும் என்ன சின்னம் என்பது இன்னமும் முடிவாகவில்லை.

அண்ணா - எம்.ஜிஆர் நினைவிடம்
ஓபிஎஸ் அணியின் சார்பில் போட்டியிடும் மதுசூதனன் இன்று மனுதாக்கல் செய்யும் முன்பாக அண்ணா நினைவிடத்திற்கும் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம் அணியினருடன் சென்று மலர்வளையம் வைத்து வணங்கி வேண்டிக்கொண்டார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் மலர் தூவி வேண்டிக்கொண்டனர்.

ஜெயலலிதா நினைவிடம்
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். மதுசூதனனுடன் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஓபிஎஸ் அணியின் மைத்ரேயன், பிஎச் பாண்டியன், செம்மலை, பொன்னையன் உள்ளிட்டோர் வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

வேட்மனு தாக்கல்
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். திமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். கடைசி நாளான இன்று மதுசூதனன் மனு தாக்கல் செய்ய ஆயத்தமாகி வருகிறார்.

டிடிவி தினகரன்
கட்சியும், சின்னமும் கிடைக்காவிட்டாலும் வேட்பாளர்தான் தான்தான் என்று கூறும் டிடிவி தினகரனும் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். அவருடைய சின்னம் என்ன வென்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.

ஜெயலலிதா ஆசி
ஜெயலலிதா நினைவிடத்தில் வேட்பு மனு ஆவணங்களை வைத்து வணங்கிய பின்னர் அதனை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய உள்ளனர். ஜெயலலிதாவின் ஆசி மதுசூதனனுக்கு கிடைக்குமா என்பது ஏப்ரல் 12ஆம் தேதி தெரியவரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications