வேலூரில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவுக்கு ஹைகோர்ட் அனுமதி! 17 நிபந்தனைகள் விதிப்பு!!
சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவை வேலூரில் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த விழாவை நடத்த 17 நிபந்தனைகளையும் சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.
மைசூரை ஆண்ட விடுதலைப் போராட்ட வீரர் திப்புசுல்தானின் பிறந்த நாள் நவ.20. திப்புவின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தை வேலூர் மாவட்டம் குடியாத்தம் அலியார் தெருவில் நடத்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால் கர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவின் போது நிகழ்ந்த வன்முறையை சுட்டிக் காட்டி வேலூர் போலீசார் இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலர் இஸ்மாயில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்த போலீசார், வேலூர் ஆம்பூரில் அண்மையில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. தற்போது திப்பு சுல்தானின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கூறியிருந்தது.
இவ்வழக்கை கடந்த 23-ந் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் விசாரித்த போது, தமிழக அரசே திப்புசுல்தானுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கட் நாட்டியுள்ளது. ஆகையால் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பது தேவையற்றது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த விழாவை அனுமதிப்பதற்கான நிபந்தனைகளை தாக்கல் செய்ய போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனடிப்படையில் போலீசார் 17 நிபந்தனைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதை ஏற்ற நீதிபதி சுந்தரேஷ், ஜனவரி 9 அல்லது 10-ந் தேதியன்று மனுதாரர் விழாவை நடத்தலாம் என்றும் பொது அமைதியை கெடுக்கக் கூடாது; பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்பது உட்பட 17 நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டு அனுமதி அளித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications