மாணவர்கள் மீதான போலீஸ் வெறித் தாக்குதல்- திங்களன்று விரிவான விசாரணை: ஹைகோர்ட்
மாணவர்கள் மீதான போலீசாரின் வெறித்தனமான தாக்குதல் தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: போலீசார் சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.
வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.

நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், உரிய ஆதாரங்களுடன் திங்களன்று ஆஜராக வேண்டும்; இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications